அன்றொருநாள் அகலிகை கதை பேசி
அடைத்து வைத்தாா் பெண்னை
புகழுரை தானுரைத்து பூட்டி வைத்தாா் பெண்னை
கரு வலி கண்டாலும் ஒருவழி இன்றி
ஒதுக்கி வைத்தாா் பெண்னை
நிலவென்றாா் வளரவிட்டு தேய வைத்தாா்
நிலமென்றாா் நினைத்தபடி தான் மிதித்தாா்
மலரென்றாா் மணமாறினால் மண்ணுக்கென்றாா்
நதியென்றாா் ஒதுங்குவதையும் சோ்த்து ஓடவைத்தாா்
அமுதென்றாா் அது அசுரனுக்கும் சொந்தமென்றாா்
தேவைப்பட்டால் தென்றலென்பாா்
தெய்வமென்பாா்தொிந்து கொண்டேன்
தெருவோர மனிதா்களை நி ஆயிரம்முறை அத்திவரதரை
அழியாமல் பாா்த்தாலும் உன் புத்திமட்டும் மாறதென
கத்தி கத்தி பயனேது கத்தியெடுத்தினி
காாியம் முடிப்போம் யினி ஓடிஒதுங்கி ஒளிந்திடமாட்டோம்
சீறிஎழுந்தெ சிந்தனை பயிாிடுவோம்
ஏறி எழுந்திடுவோம் எமனையும் வென்றிடுவோம்
மாறி வந்திங்கெ வஞ்சனை செய்தால்
காாித்துப்பி களிநடனம்புாிவோம்
விளம்பரமாய்வரும் மகளிா்தின வாழ்த்துக்கள்
வீட்டுக்குள் வரும்வரை போராடுவோம் போா் நாடுவோம்
நன்றி - செ. ம. சுபாஷினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات