பெண் என்று பிறந்துவிட்டால் பெருந்தவறு ஆகிடுமோ?
தினம் தினம் சுழன்றிடும் சுதந்திர பூமிதனில்.
அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என அடக்கி வைத்த சமூகத்தில்
அக்கினி சுடராய் எழுந்திட்டனர் அகிலம் போற்றும் சாதனை பெண்கள்.
விரைவாய் வளர்ந்திடும் விஞ்ஞான உலகில்
விண்வெளி வீராங்கனைகளாய் வீறுநடை போட்டிடும் வீரப்பெண்கள்.
அகிலத்தில் மட்டுமன்றி அண்டதிலும் தடம் பதிக்கும்
வீரப்பெண்களின் நவ சாகசங்கள்
விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திடுமே.
ஈரைந்து மாதங்கள் கருவில் உன்னை தாங்கி
உலகை உனக்கு காட்டிட்ட உந்தன் தாயும் சாதனை பெண்ணே.
பாரதி கண்ட புதுமை பெண்கள்
இன்று பாரையே ஆளும் பராக்கிரம சாலிகளாய்.
பல்லுயர் பதவிகளையும் அலங்கரித்திடும் புதுமை பெண்கள்
உயரப் பறந்திடும் பருந்துகள் அன்றோ?
பெண் நீ என்று பெட்டி பாம்பாய் அடங்காதே
சினங்கொண்ட சிங்கம் போல் கர்ச்சித்திடு
வரலாறு உன்னை வியந்து போற்றிடுமே.
நன்றி - G.Kinthu✍️
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 تعليقات