தமிழ் கவிதை பாட்டி - Tamil Kavithai Patti

Tamil Kavithai Patti

சுருங்கிய வெற்றிலை

சுருங்கிய தோல்

சுருங்கிய சுருக்கு பை

பாட்டியின் பட்டா


உள்வாங்கிய கண்கள்

உள்வாங்கிய கனவுகள்

அடையாளத்திற்கு கண்ணாடி-அதுவும்

கண்களை நழுவி

மூக்கினை தழுவி


பாக்கி வைக்காத காலத்தை

பாக்கு மென்று கடந்து

செத்த நாக்கில் சிவப்புக்கொண்டு

வத்திப்போய் வாழ்கிறாள்


நடுக்கத்தை நிற்க வைத்து

நடக்க பழகுகிறாள்

ஒருவேளை உலையில்

மூன்றுவேளை பசியாற்றுகிறாள்


அனாதைக்காரி

அஞ்சல்காரனை நம்புகிறாள்

மாத உதவித்தொகையை

மரணம் வரை கேட்கிறாள்


வாசலில் நீர்தெளித்து

புள்ளிகளை தள்ளி வைத்து

புதுக்கோலம் போடுகிறாள்


தூண்டில் வீசி பிடித்துக்கொண்டு

தூரத்தில் போய்விட்ட

தூரத்து சொந்தைங்களையெல்லாம்

காண துடிக்கிறாள்


குன்று போல் இருந்தப் பாட்டி

கூனாகி விட்டாள்

கண்ணாடியை

 துடைத்து துடைத்தே

கண்களை அழுக்காக்கி கொண்டாள்


மரணபடுக்கை வரை

நடக்க வேண்டுமென்றே

வெடிப்பு விழுந்த பாதங்களை

வேண்டிக் கேட்டுக்கொள்கிறாள்

நன்றி - கு.மோகன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات