தமிழ் கவிதை நினைவில் மறந்த நிகழ்வுகள் - Tamil Kavithai Ninaivil

Tamil Kavithai Ninaivil

அலாரம்  இன்றி அதிகாலை எழுந்து,

வாசல் பெருக்கி, சாணம் தெளித்து,

வாசல் அடைத்த பெரிய மாக்கோலம்!

வேப்பங்குச்சி உடைத்து பல் துலக்கி,


குளத்தில் அழகாய் ஓர் குட்டி குளியல்!

களிமண் குழைத்து , அப்பா செய்த அடுப்பில்,

மண்பானையில் அம்மா செய்த சமையல்!

ஆட்டி வைத்த குழம்பும்,  அம்மியில் அரைத்த துவையலும்!


அம்மா அடித்து அழும் குழந்தைகள் !

ஆறுதல் கூறும் அத்தைகள்!

பல வீட்டு அஞ்சறை பெட்டி பொருட்கள்!

சங்கமித்து தயாராகும் கூட்டாஞ்சோறு!


சலங்கைகள் ஒலிக்க, இரட்டை மாட்டு வண்டியில் 

குலுங்கலுடன் குதூகலமாய் ஓர் பயணம்!

வாழ்த்து அட்டைகளை அனுப்பிவிட்டு

பதிலுக்காய் தபால்காரரை எதிர் நோக்கி காத்திருக்கும் விழிகள்!


ரெட்டை ஜடை போட்ட தாவணிப்பெண்கள், 

தலை நிறைய சூடிய டிசம்பர் பூக்கள்!

காலத்தின் வேகத்தில் நினைவில் மறந்த நிகழ்வுகள்.

நன்றி - அமிர்தம் ரமேஷ்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات