தமிழ் கவிதை இயற்கை அழகு - Tamil Kavithai Iyarkai Azhagu

Tamil Kavithai Iyarkai Azhagu

மரமது தந்த மலர் அழகு.

மலரது வீசும் மணம் அழகு.


மலையது தந்த நதி அழகு.

நதியது  ஓடும்  ஒலி அழகு.


நீலக் கடலின் அலை அழகு.

அலைகளின் இடையே நுரை அழகு.


வெயிலில் பாடும் குயில் அழகு - துளி

மழையில் ஆடும் மயில் அழகு.


இரவில் உலவும் நிலவு அழகு.

ஈரக் காற்றின் இதம் அழகு.


வனப்பு மிக்க வனம் அழகு.

வறண்ட பாலை வனம்  அழகு.


கருமுகில் தந்த மழை அழகு.

மழையது பெய்த மறுகணம் எங்கும்

தவளைச் சத்தம் தான் அழகு.


விண்ணழகு விண்மீன் அழகு.

மண்ணழகு மண்வாசம் அழகு.

அழகு அழகு எல்லாம் அழகு.


இச்சை தரும் இயற்கை அழகு.

இதற்கு ஈடாகுமோ செயற்கை அழகு.

நன்றி - Saheeka Farwin

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات