ஔவியம் கொள்ளாது
ஓயாது உழைத்து
ஒறுத்தாலும் வலிக்காது
ஐயங்களை தீர்த்து
ஏதம் செய்ய விடாது
எஞ்சியதை உண்டு
ஊணூட்டி வளர்த்து
உழிஞைச் சாறும் சமைத்து
ஈதலை முதலில் கற்பித்து
இணையிலா உறவேதுமின்றி
ஆரிராரோ பாடிடும்
அம்மா, பிள்ளையின் முதல் வரம்
பதவுரை:
ஔவியம் - பொறாமை
ஒறுத்தாலும் - தண்டித்தாலும்
ஏதம் - குற்றம்
ஊணூட்டி - உணவு ஊட்டி
உழிஞைச் சாறு- முடக்கத்தான் ரசம்
ஈதல் - தானம்
நன்றி - அழ.குழ.மா.அழகப்பன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
4 تعليقات
Great
ردحذفநன்றி கார்த்தி 🙏😊
ردحذفஅருமையான கவிதை "கண்காணும் தேவதை அம்மா"
ردحذفThank you Ram
حذف