இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையினால் 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் பதினாறாவது நிகழ்வு கோப்பாய் தெற்கு, பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள யா/ கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் ஜனவரி மாதம் எதிர்வரும் வியாழன் (25), வெள்ளி (26), சனி(27), ஞாயிற்றுக்(28)கிழமைகளில் இடம்பெறவுள்ளது.
25 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்புத்தக அரங்க விழாவின் முதல் நாள் நிகழ்வாக எழுத்தாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான இயல்வாணன் அவர்களின் 'யாரும் பாடலாம் என்னை' கவிதைத் தொகுதி நூலின் வெளியீட்டு நிகழ்வு தாயகம் சஞ்சிகையின் ஆசிரியரும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும், எழுத்தாளருமான க.தணிகாசலம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் நூல் வெளியீட்டு உரையைச் சட்டத்தரணியும் எழுத்தாளருமான சோ.தேவராஜா அவர்களும், நூல் மதிப்பீட்டுரைகளை கவிஞரும், ஆய்வாளரும், ஆசிரியருமான ந.குகபரன் அவர்களும், கவிஞரும், கிராமசேவகருமான வ.வடிவழகையன் அவர்களும், ஏற்புரையை நூலாசிரியர் இயல்வாணண் அவர்களும் ஆற்றவுள்ளனர்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தயாரிப்பில், க.சத்தியசீனின் நெறியாள்கையில் சிறுவர் நாடகங்கள் இரண்டும் இடம்பெறவுள்ளன. ஆர்வலர்கள் அனைவரைம் இந்நிகழ்வில்
தவறாது கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.





0 Comments