இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை | Medical and Law courses are not covered in the Indian Scholarship Scheme

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளமை தொடர்பாகக் கடந்த வாரம்  அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 

தற்கமைய 2024 - 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Medical and Law courses are not covered in the Indian Scholarship Scheme




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات