வெள்ளை காகிதம்
அதில் வானின் நீலம் நீ!
பல வண்ணங்களின் வர்நாஜாலம்
புனைந்தாய் ஒரு எழுத்தோவியம்!
எழுதுவோரின் எண்ணங்கள் பல
அதை ஒருங்கிணைக்கும் பண்பு!
சிறுத் துளிகள் சேர்த்தேன்
அதை பெருங்காவியம் ஆக்கினாய்!
கத்தியின் முனைகள் கூர்மை என்றேன்
நீயோ.அதை உன் முனையால் வீழ்த்தினாய் !
முடியரசர்கள் பலர் கண்ட இத்தமிழ்நாட்டில்
கவியரசர்கள் பலர் உருவாக்கினாய்!
உனது திருக்கை பட்டால்
வெற்று காகிதமும் பத்திரமாக பத்திறப்படும்!
இவ்வளவு மகிமைகள் செய்கிறாய்
நீ அரசனோ இறைவனோ? என்று கேட்டேன்
நான் அரசனுக்கும் அரசன் என்றாய்
இறைக்கும் இறை தருவேன் என்றாய்!
கலைமகளின் கானம் நீ
அலைமகளின் அட்சய பாத்திரம் நீ
மலைமகளின் மறம் நீ
எங்கும் நீ எதிலும் நீ
உனது அருமையால் கல்வியும் சிறக்கும் அன்பும் வலுப்பெறும்
காதலும் கைக்கூடும்!
இவ்வளவு கைவண்ணம் செய்யும் நீ யார்? என்று கேட்டேன்
சில்லென்ற தென்றேல் போல சிரித்துக்கொண்டே சொன்னாய்
நான் எழுதுகோல் என்று
பல கைகள் ஒன்று சேர்ந்தும் நடக்காத ஒன்று
உன் ஒருவரின் கைவண்ணத்தில் நிகழ்ந்தது
அறிந்தேன் உன் எண்ணம்
இது தன் எழுதுகோலின் கைவண்ணம்!!
நன்றி - Udithyan Baskaran
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 تعليقات