போர்த்துக்கேயர் இலங்கை வருகை - Visit of the Portuguese to Sri Lanka

போர்த்துக்கேயர் இலங்கை வருகை -

போர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.

போர்த்துக்கேயர் இலங்கைமீது கவனம் செலுத்துதல்

போர்த்துக்கேய இனத்தைச் சேர்ந்த வாஸ் கொடகாமா இந்தியாவுக்கு வந்து நீண்ட காலம் செல்லும் முன்னரே இலங்கை பற்றிய சில விடயங்களையும் அவர்கள் அறிந்திருந்தனர். இலங்கையில் சிறந்த கறுவா விளைவதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

அக்காலத்தில் ஐரோப்பிய சந்தையில் கறுவா போன்ற வாசனைத் திரவியங்களுக்கு நல்ல கேள்வி இருந்ததால் இலங்கை மீது போர்த்துக்கேயர் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். 

அக்காலத்தில் இலங்கையைப் போர்த்துக் கேயர் "செய்லான்" என்ற பெயராலேயே அறிந்திருந்தனர். போர்த்துக்கேய மன்னன்

1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டீ அல்மேதா எனும் தளபதியைத் தனது இராசப் பிரதிநிதியாக நியமித்தபோது "செய்லான்" தீவைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தான். இவ்வாறு போர்த்துக்கேயர் இலங்கையுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற வேளையில் பிரான்சிஸ்கோ டி அல் மேதாவின் மகன் லோரன்சோ டி அல்மேதா உள்ளிட்ட குழுவினர் 1505 ஆம் ஆண்டு எதிர் பாராத விதமாக இலங்கையை அடைந்தனர்.


இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி

நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்பிற் கான மூன்று முக்கிய பாதைகள் இருந்தன. 

கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசியா வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை. கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து மத்திய தரைக் கடல் வழியாக எகிப்து, செங்கடல் ஊடாக இந்து சமுத்திரத்திற்கு வந்த பாதை.

கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து பக்தாத், பாரசீகக்குடா வழியாக இந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்த பாதை.

இந்த பாதைகளினூடாக வர்த்தகத்தொடர்பு இடம் பெற்றபோது, தரைமார்க்கமாகப் பொருள்களை எடுத்துச்செல்லும் பொருட்டு மிருகங்கள் பயன் படுத்தப்பட்டன; கடல் வழியாகப் பொருள் களை எடுத்துச் செல்லும்போது சுப்பல்கள் பயன் படுத்தப்பட்டன. முஸ்லிம்கள் ஆசியாவில் வாச னைப் பொருள்களைச் சேகரித்து ஐரோப்பாவுக் குக் கொண்டுசென்று விற்றதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர். மேற்கூறப்பட்ட பாதைகள் மூன்றும் கொன்ஸ்தாந்திநோபிளுடன் தொடர்புடையதாக இருந்தன. ஐரோப்பிய கிறிஸ் தவர்களின் கையிலிருந்த இந்நகர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த துருக்கியரால் 1453 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமையானது ஆசிய, ஐரோப்பிய மரபு ரீதியான வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொன்ஸ்தாந்திநோபிள் நகர் (தற்கால இஸ்தான்புல்) இஸ்லாமியரின் கையில் வந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாகியது. இந்நகரைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் ஆசியாவின் வாசனைப் பொருள்களின் விலையை உயர்த்தியதோடு, பொருள்கள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தியமை, உரிய வேளையில் பொருள்களை வழங்காமை என்பனவற்றால் ஐரோப்பியருக்கு இன்னல்கள் விளைவித்தனர். ஐரோப்பியர் நீண்ட காலமாக ஆசிய வாசனைப் பொருள்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் கறுவா, மிளகு உட்பட வாசனைப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கேள்வி இருந்தது. வழமையான வர்த்தகப் பாதை இஸ்லாமியரின் வசம் வந்ததால் ஆசியாவுக்கு வருவதற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் போர்த்துகேயர் முதலிடம் வகித்தனர்.

போர்த்துக்கேயர், தமது தாய் நாடான போர்த்துக்கலிலிருந்து இலங்கைக்கு வந்தனர். போர்த்துக்கல் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகும். அது அத்திலாந்திக் சமுத்திரத்தை நோக்கி அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாகவே அவர்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டனர். எனவே அவர்கள் கடல் செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கலின் அரசனாக இருந்த நான்காம் ஹென்றி அல்லது கடலோடி ஹென்றி என்பவன் நாடுகாண் பயணத்தில் அதிக ஆர்வம் செலுத்தினான். போர்த்துக்கலில் கப்பல் கட்டும் தொழில் தொடர்பாகப் பாடசாலை ஒன்றை நடாத்தியதுடன் அங்கு தேசப்படம், நட்சத் திரம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனால் ஆசியாவுக்குச் செல்வதற்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிடப் போர்த்துக்கல் முன்னணியில் இருந்தது. போர்த்துக்கேயனான வஸ்கொடகாமா ஆபிரிக்காவைச் சுற்றி 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்ததும் ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் செயற்படத் தொடங்கியது. போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருகைதந்த பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் போன்ற ஏனைய ஐரோப்பியர்களும் ஆசியாவுக்கு வந்து பல்வேறு இடங்களில் தமது ஆதிக்கத்தைப் பரப்பினர்.

இவ்வாறு 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டு 450 ஆண்டுகள் வரை ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் நிலைபெற்றது.

ஐரோப்பியர் பல நோக்கங்களுடனேயே ஆசியாவுக்கு வந்தனர். பொருளாதார ரீதியாக இலாபம் பெறல், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதல், உலக ரீதியாகப் புகழ் பெறல் என்பன அவற்றில் முக்கியமானவையாகும். 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு அமைய ஐரோப்பியரின் ஆசிய வருகையின் நோக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாயின.

போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்ததன் அடிப்படை நோக்கம் பொருளாதார ரீதியாக இலாபம் பெறுதல், கத்தோலிக்க சமயத்தைப் பரப்புதல் என்பனவாகும். போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வரும்போது ஆசியாவில் வர்த்தக ஏகபோக உரிமை முஸ்லிம்களின் கையில் இருந்ததால் அவர்களைத் தோற்கடித்து வர்த்தக ஏகபோக உரிமையைத் தமதாக்கிக் கொள்வது போர்த்துக்கேயரின் குறிக்கோளாக இருந்தது. இதன் மூலம் நல்வ இலாபத்தைப் பெற என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்தவர்களையும் வாசனைப் பொருள்களையும் தேடி இங்கு வந்துள்ளோம் எனக் கள்ளிக்கோட்டையை வந்தடைந்ததும் வாஸ்கொடகாமா கூறியதிலிருந்து இது வாகிறது. வர்த்தகக் அமைக்கவும் ஐந்து களஞ்சியம் குருமார் தெளி ஒன்றை சமயம் போதிக்கவும் கள்ளிக்கோட்டை மன்னனிடமிருந்து அனுமதி பெறும்படி வாஸ்கொடகாமாவிற்குப் இந்தியாவுக்கு வந்த இரண்டாவது கடற்படைக் குழுவினருக்குப் போர்த்துக்கலிலிருந்து அறிவுரை வழங்கப்பட்டது. தமது அதிகாரம் பரவும் பிரதே சங்களில் தமது சமயத்தைப் பரப்புதல் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நோக்கமாக இருந் தமை இதிலிருந்து தெளிவாகிறது.

இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் வழியில் முக்கிய மத்திய நிலையமாக அமைந்துள்ளதால் ஐரோப்பியரின் ஆசிய செயற்பாடுகளின் வர்த்தக, யுத்த நடவடிக்கைகளில் இலங்கை முக்கிய இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயராவ் செய்லோன் என அறிமுகமான இலங்கையில் உயர் ரசுக் கறுவா உற்பத்திசெய்யப்படுவதாக அவர்கள் அறிந்திருந்தனர். இதனால் இந்தியாவுக்கு வந்து சிறிது காலத்தில் போர்த்துக்கேயர் இலங்கை மீது கவனம் செலுத்தினர். 1505 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போர்த்துக்கேய மன்னனால் கிழக்கு நாடுகளின் இராசப்பிரதிநிதியாகப் பிரான்சிஸ்கோ டி அல்மேடா என்பவன் நியமிக்கப்பட்டான். போர்த்துக்கேய மன்னனால் இராசப் பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் இலங்கையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். பிரான்ஸிஸ் அல்மேடாவின் மகனான லோரேன்சோ டி அல்மேடா பயணித்த கப்பல் புயல் காற்றினால் தாக்குண்டு எதிர்பாராதவிதமாக இலங்கையை அடைந்தது. இதன் மூலம் போர்த்துக் கேய மன்னனின் குறிக்கோள் நிறைவேறியது.

1505 ஆம் ஆண்டு லோரேன்சோ டி அல்மேடா உள்ளிட்ட போர்த்துக்கேயக் குழுவினர் இலங்கைக்கு வரும்போது இலங்கையில் அரசியல் நிலைநாட்டிட ஒற்றுமை காணப்படாமையானது வெளிநாட்டினர் இந்நாட்டில் தம் ஆதிக்கத்தை வாய்ப்பாக அமைந்தது. 6 ஆம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராச்சியத்தைத் தோற்று வித்து, நாட்டை ஒன்றிணைத்து அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தி இருந்தபோதிலும், அவனது மரணத்தின் பின்னர் அந்த நிலை மாற்றமடைந்திருந்தது. இதனால் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சியம் தவிர்ந்தச்சியங்கள் இருந்தன. இலங்கைக்கு இரண்டு கண்டி, யாழ்ப்பாணம் என்ற வந்த போர்த்துக்கேயர் முதலில் இராச்சியத்துடன் தொடர்பை மேலும் கோட்டை ஏற்படுத்தினர். கோட்டை அரசனைச் சந்திக்கப் போர்த்துக்கேயக் குழுவினர் சுற்றி வளைத்துக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொழும்புக்கும் கோட்டைப் பிரதேசத்திற்கும் இடையே நீண்ட தூரம் இருப்பதாகக் காட்டுவதற்காகவே இந்த உபாயம் மேற்கொள்ளப்பட்டதால் "பறங்கியர் கோட் டைக்குப் போனது போல்" என்ற பிரயோகம் ஏற்பட லாயிற்று.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது பரந்த இராச்சியமாக இருந்த கோட்டை, 1521 ஆம் ஆண்டு நிகழ்ந்த விஜயபாகு கொலையினால் மூன்று பிரிவுகளாகப் பிளவுண்டமை, போர்த்துக்கேயர் தமது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலைநாட்ட மேலும் இலகுவாக அமைந்தது. கோட்டை ஆட்சியாளனாக இருந்த 8ஆம் வீரபராக்கிரமபாகு மன்னனின் பின்னர் அவனது மகனான 6 ஆம் விஜயபாகு அரசனானான். விஜயபாகுவின் முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்த புவனேகபாகு. மாயாதுன்னை, றைகம்பண்டார என்ற மூன்று புதல்வர்களுக்கும் எதிர்காலத்தில் அரசுரிமையை வழங்காது, தேவராஜ என்ற வேறொரு இளவரசனுக்கு அந்த உரிமையை காரணமாக மோதல் வழங்கும் முயற்சியின் ஏற்பட்டது. தமக்கு அரசுரிமை கிடைக்காது போவதை அறிந்த புவனேகபாகு, மாயாதுன்னை, றைகம் பண்டார ஆகிய மூவரும், அக்காலத்தில் கண்டி இராச்சிய மன்னனாக இருந்த ஜயவீர பண்டாரவின் உதவி பெற்றுக் கோட்டைக்கு வந்து அரசைப் பெற பாகு முயன்றபோது, சலமான் என்பவனால் விஜயபாகு கொலை செய்யப்பட்டான். 6 ஆம் விஜயபாகு மன்னனிடமிருந்து 1521 ஆம் ஆண்டு அதிகாரத்தைப் பெறும் பொருட்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் (விஜயபாகு கொள்ளை) விஜயபாகு கொலை எனப்படும். இச்சம்பவத்தின் பின்னர் கோட்டை இராச்சியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இளவரசர்கள் மூவருக்கிடையே பகிரப்பட்டன. இதற்கமைய கோட்டையின் ஆட்சியாளனாக 7 ஆம் புவனேகபாகுவும் சீதாவாக்கையின் ஆட்சி யாளனாக மாயாதுன்னையும் றைகம பகுதியின் ஆட்சியாளனாக றைகம் பண்டாரவும் விளங்கினர். இவ்வாறு கோட்டை இராச்சியம் மூன்று பிரிவு களாகப் பிளவுற்றமையானது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆவலுடன் இருந்த போர்த்துக்கேயருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

போர்த்துக்கேயர் இலங்கை ஆதிக்கம்.

  • யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர்
  • சீதாவாக்கை இராசதானியில் போர்த்துக்கேயர்
  • இலங்கையின் கரையோரப் பகுதியில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம்.

போர்த்துக்கேயர் இலங்கையில் நடத்திய போர்கள்.

  • ரந்தெனிவெலப் போர்
  • கன்னொறுவப் போர்
  • பலனைப் போர்
  • தந்துறைப் போர்


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات