தம்பதெனிய மன்னர்கள்
மூன்றாம் விஜயபாகு 1232 - 1236
இரண்டாம் பராக்கிரமபாகு 1236 - 1269
நான்காம் விஜயபாகு 1270 - 1273
முதலாம் புவனேகபாகு 1272 - 1272
தம்பதெனிய இராச்சியம் அல்லது தம்பதெனிய இராசதானி (Kingdom of Dambadeniya) என்பது கிபி 1220–1354 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரு இராச்சியம்.
கலிங்க மாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாம் விஜயபாகு மன்னனால் (1232–1236) தம்பதெனிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இம்மன்னன் 'மலயரடவில்' ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தான். கலிங்க மாகனால் அழிவுற்றிருந்த தனது நாட்டை மீள் கட்டியெழுப்ப முயற்சித்தான். முக்கியமாக பௌத்த மதத்தை சீர்திருத்த முயற்சித்தான்.
பொலன்னறுவை இராசதானியின் இறுதி ஆட்சியாளனான பராக்கிரம பாண்டியனுடைய ஆட்சிக்காலமானது 1215ல் இடம்பெற்ற கலிங்க மாகனின் ஆக்கிரமிப்புடன் முடிவுற்றது. கலிங்க மாகன் இலங்கையில் பொலன்னறுவையை அண்டிய பகுதிகளிலும் இராசரட்டை வடமேல் பகுதிகள் மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் தனது நேரடி அதிகாரத்தை நிலைநாட்டி கொண்டான்.
இதன் பின்னரான மாகனது மிகக் கொடிய ஆட்சிக்காலப்பகுதியில் தமது பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்த மக்கள் குன்றுகளையும், மலைகளையும் அண்டிய பகுதிகளிலும் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு இடம்பெயர்ந்து வந்த மக்களுக்குத் தலைமை தாங்கிய நால்வர் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- புவனேகபாகு - கோவிந்த மலை
- சுப தளபதி - யாப்பகுவ
- சங்க தளபதி - மினிப்பே
- 3 ம் விஜயபாகு - தம்பதெனிய
இவற்றுள் சில ஆட்சி நிலையங்கள் பிற்காலத்தில் இலங்கையின் இராசதானிகளாகவும் உருவாகின.
- தம்பதெனிய
- யாப்பகுவ
- குருணாகலை
- கம்பளை
- கோட்டை
2 ஆம் பராக்கிரமபாகு (1236–1270)
இவ்வரசன் கலிங்க மாகனுடைய ஆட்சியில் இருந்து இராசரட்டைப் பிரதேசத்தை மீட்டெடுத்ததால் தம்பதெனிய இராச்சியத்தின் தலை சிறந்த மன்னனாகக் கருதப்படுகின்றான்.
தம்பதெனிய கால இலக்கியம்
- சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்கள்
- புத்தபுத்ர தேரர் - பூஜாவலிய. கவிசிலுமின, வனவினிச
- 2 ம் பராக்கிரமபாகு - சன்னய சிதத் சங்கராவ, வனவினிச சன்னய
- வேதேக தேரர் - விசுத்தி மார்க்க சன்னய
- தர்மசேன தேரர் - ரத்னாவலிய
- பாளி மொழியில் எழுதப்பட்ட நூல்கள்
- வேதேக தேரர் - ரசவாஹினி, சமன்தகூட வர்ணனாவ
- பங்சமூல பிரிவேனாதிபதி - பேசஜ்ஜமஞ்ஜுசா
- அனேமதஸ்ஸி தேரர் - தைவக்ஞகாமதேனு
- அனேமதஸ்ஸீ தேரரின் சீடன் - ஹத்தவனகல்ல விஹாரவங்சய
தம்பதெனிய இராசதானி 2 ம் பராக்கிரமபாகு கி.பி 1236 - 1270 இவர் பற்றி அறிய உதவும் மூலாதாரங்கள்
- மகாவம்சம்
- பூஜாவலிய
- தம்பதெனிய அஸ்ன
- கந்தவுறு சிரித
தம்பதெனிய இராசதானிசமய பணிகள்
நாரம்மல பிரதேசச் செயலகத்தின் வரலாறு
குருநாகல் மாவட்டத்தின் புறநகரான நாரம்மலை, நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதான நகரொன்றாகும். பண்டைய காலத்தில் தம்பதெனிய ஹத்பத்துவ, தம்பதெனிய உடுகஹ வடக்கு, மற்றும் தம்பதெனிய உடுகஹ மேற்கு பகுதிக்குட்பட்டிருந்த பிரதேசமாகும். தற்போது இது தம்பதெனிய தேர்தல் பிரிவிற்குட்பட்ட ஒரு பிரதேசமாகும். இப்பிரதேச செயலாளர் பிரிவு 10.944 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இப்பிரதேசம் 54 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட 144 கிராமங்களை உள்ளடக்கியிருப்பதோடு 62162 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவைச் சுற்றி பன்னல, குளியாபிடிய கிழக்கு, வீரம்புகெதர, பொல்கஹவெல போன்ற பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன.
நாரம்மல பிரதேசத்தின் வரலாற்றை நோக்கும் போது புராதணகாலத்தில் 12 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட காலிங்க மாகா ஆக்கிரமிப்பின் மூலம் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து கி.பி 1232ம் வருடம் மூன்றாம் விஜயபாகு மன்னன் தம்பதெனிய ராச்சியத்தை நிறுவினார். தம்பதெனிய மாளிகை கற்குகையினை மையப்படுத்தி அவர் தனது மாளிகை நிறுவி அப்பிரதேசத்தை தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். மேலும் அவரது முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜேயசுந்தராராமய எனும் வழிபாட்டுத் தளத்தையும் நிறுவினார்.
மூன்றாம் விஜயாகு மன்னனின் நான்கு வருட ஆட்சிக்காலம் முடிவுற்றதன் பின்னர் 1236 ஆம் ஆண்டு அவரது புத்திரர் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் இரண்டாவது மன்னராக முடிசூடுகின்றார்.
இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் ஒரு இலக்கியத் தத்துவஜானியாக விளங்கினார் அதனால் அவர் சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இவ்வகையில் கவுசிலுமின எனும் கவிதை நூலை யாத்து சமூகத்துக்கு வழங்கினார். மேலும் சித்தத் சங்கராவா, பூஜாவலியா, எலு அத்தனகுலு வான்சயா, சதர்மா ராதனவலியா போன்ற தொகுப்புக்களையும் அவர் வழங்கினார்.
பராக்கிரமபாகு மன்னர் தனது தந்தையின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு அழகான மூன்று மாடி ஆலயத்தைக் கட்டினார். அதில் புத்தரின் பல் நினைவுச்சின்னத்தையும் ஏற்படுத்தினார்
அந்த ஆலயத்துக்கு செல்லும் வழியில் நாரம்மல என்று தற்போது அறிமுகப்பட்டிருக்கும் இப்பகுதியில் இருந்து தங்க நிறத்திலான நா மலரை பறித்துச் சென்று பூஜை செய்தனர். அந்த தங்க நிறத்திலான பூவைத்தான் 'ரன் நா மலஎன்று அழைத்தனர் காலப்போக்கில் அது நா ரன் மல என்று மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து நாரம்மல என பெயர்பெற்றது.
அவ்வாலயத்தைக் கட்டி முடித்ததன் பின்னர்அதில் பூஜை செய் வதற்காகவேண்டி சிரிவர்தனபுரயில் இருந்து தம்தெனிய சிரீவிஜயசுந்தராராமய வரையில் பெரஹர ஒழுங்குசெய்யப்பட்டது. அன்று தொட்டு அவ்வாலயத்தில் இன்று வரை அது இடம்பெற்று வருகின்றது.
தம்பதெனிய இராசானிதியின் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னன் இரண்டாம் பராக்கிரபாகு ஆட்சிக்காலம் 34 வருடங்களாகும். அதன் பின்னர் கி.பி 1270 ல் அவரது மகன் நான்காம் விஜயபாகு தம்பதெனிய இராசதானியின் சிம்மாசனத்தைப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டு வருடங்களில் 1272ல் ஏற்பட்ட உள்ளக கிளர்ச்சியொன்றின் மூலம் நன்பனொருவனால் அவர் கொலை செய்யப்படுகின்றார். அதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான முதலாம் புவனேகபாகு மன்னராக முடிசூடுகின்றார்.
பௌத்தமதத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்த முதலாம் புவனேகபாஹு மன்னரின் ஆட்சியின் போது ஆர்ய சக்கரவர்த்தியின் படையெடுப்பால் கி.பி 1284 ஆம் ஆண்டில் தம்பதெனிய இராச்சியம் முடிவுக்கு வந்தது.
0 تعليقات