அரசியல் என்றால் என்ன? What is politics?

அரசியல் என்றால் என்ன

அரசியல் = அரிசி + இயல்

"அரிசி'' என்ற வார்த்தையிலிருந்து தான் ரைஸ் வந்தது என H.B ப்ராக்டர் (HB Proctor) குறிப்பிடுகிறார். பண்டைய காலந்தொட்டு அரிசி இயலாக வருகிறு.

சீலி எனும் அறிஞர் “அரசின் பல கூறுகளை ஆராய்வதே அரசியல்” எனக் கூறியுள்ளார். அல்பிரட் கிரேஸ் எனும் அறிஞர் “அரசாங்க தீர்மானங்களை எடுக்கும் தாவனங்களை சுற்றி இடம்பெறும் நிகழ்வுகளை கற்பதே அரசியல்” என்கின்றார். மேலும் அரசு, அரச நிர்வாகம், ஆட்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே அரசியல் ஆகும். பொதுவாக நோக்கில் அரசியல் என்பது தேசத்தை ஆட்சி புரிதல் என்பதாகும்.

மனித வாழ்க்கையும், அரசியலும் பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கையாக உள்ளது என்றால் அது மிகையல்ல. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது.

ஒரு நாட்டில் சிறந்த அரசியல் நிகழும் போதுதான் அங்கு ஒழுங்கும் நிகழும். அரசியலானது பொருளாதாரம், சமூகம், மனித மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அரசியல் நிலைத்தன்மையே நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையும். அரசியல் நிலைத்தன்மை உடைய நாடுகள்தான் முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது.

பல வளங்கள் நிறைந்திருக்கும் போதும் அரசியல் நிலத்தன்மையற்ற நாடுகளை முதலீட்டாளர்கள் நாடுவதில்லை.


அரசு/அரசாங்கம்

அரசு அரசாங்கம் (governmicrit) அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும்.

அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காக்கும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.


அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானத்தின் தன்மை

அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் இரு வேறு கருத்துக்களாகும். அரசியல் என்பது பேச்சு வழக்காக உள்ளது. அதனைப் பொருள் மரபில் வரைவிலக்கணப்படுத்தும் போது அரசியல் விஞ்ஞானம் வேறு அரசியல் வேறாகும்.

அரசியல் என்பது குறுகிய விடயமாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது நீண்ட பரப்பைக் கொண்டது. அரசியல் என்பது கட்சிகள், குழுக்கள், அரசியல்வாதிகளினுடைய நடத்தைகள் போன்றவற்றை உள்டக்கியதாகும்.

அரசியல் விஞ்ஞானம் என்பது எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், தத்துவசிந்தனைகள், தத்துவவியலாளர்களது கருத்துக்கள் போன்றவற்றை ஆராய்வது அரசியல் விஞ்ஞானமாகும்.

அரசியல் என்பது அரசியல் செய்தலாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியல் கற்றலாகும்.

அரசியல் என்பது பிரயோக அரசியலாகும். அதாவது அதிகாரப் பிரயோகத்தை மேற்கொண்டு அரசியலில் ஈடுபடுதலாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது கோட்பாட்டு அரசியலாகும்.

அதிகாரம் மற்றும் அதிகாரப் பிரயோகம் ஆகிய இரண்டுமே அரசியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் உண்டு.

அரசியலின் வரலாறு

போர் வளர்ச்சிக் கலையின் அடிப்படையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.

அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர். இச்சபையின் தலையாய செயல்பாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளில் சில:

  • அரசர்களின் பணப் பேழைகளையும், கருவூலத்தையும் எப்பொழுதும் நிரம்பிய நிலையிலேயே வைத்திருப்பது
  • திருப்திகரமான வகையில் இராணுவ சேவைப் பராமரிப்பு மேற்கொள்ளல்
  • அரசரால் பிரபுக்கள் மற்றும் நிலக்கிழார்கள் நிறுவப்படுதலை உறுதிப்படுத்துதல்
  • பிரபுக்களைக் கொண்டு வீரர்களைப் பராமரித்தல்
  • பிரபுக்களின் உதவியுடன் போருக்குத் தயார்ப்படுத்தும் பணி மேற்கொள்ளல்
  • அரசமைப்பு மூலம் வரிகள் சேகரித்தல் போன்றவை.

இந்த முடியாட்சி ஆலோசகர்களுடன், முடியாட்சி அமைப்பில் இல்லாத பிறர் முன்வைத்த அதிகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்புசார் முடியாட்சிகள் மேலெழும்பக் காரணமாயின. இதுவே அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாங்கம் துளிர்க்க அடிப்படைக் காரணமானது.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات