விழும் இடம் எல்லாம் பசுமையை அள்ளி கொடுக்கிறாள்
இருக்கும் இடமெல்லாம்இல்லை என்று சொல்லாமல் தாகம் தீர்க்கிறாள்
போகும் இடமெல்லாம் பூக்களோடு பசுமையையும் கொடுக்கிறாள்
உயிர் வாழ வைக்கும் ஊற்றாய் உலகெங்கும் பரவி கிடைக்கிறாள்
பரவிக்கிடக்கும் பரப்பெங்கும் வளம் செழிக்க வைக்கிறாள்
நடக்கும் இடத்தில் வாய்க்காலாய் நடக்கிறாள்
இருக்கும் இடத்தில் குலமாய் குட்டையாய் குதிக்கிறாள்
படுக்கும் இடத்தில் ஏரியாய் படர்கிறாள்
ஓடும் இடத்தில் நதியாய் உயர்கிறாள்
மலையில் தவழ்ந்து அருவியாய் கொட்டுகிறாள்
இறுதியாய் சேரும் இடத்தில் பெரும் கடலாய் சங்கமிக்கிறாய்
நீ இன்றி அகிலமும் அசையாது நீ இன்றி இயற்கையும் சுழலாது
நீ இன்றி உலகம் விளையாது பனியாய் துளியாய்
தூறலாய் மழையாய் குளமாய் குட்டையாய்
ஏரியாய் அருவியாய் நதியாய் கடலாய்
நீ இன்றி நிறைவான உலகேது?
நன்றி - கவிஞர் இரா.சுப்பிரமணியன்
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆதரவினை Like மற்றும் Share சேய்வதன் மூலம் பங்காலர்களை ஊக்கப்படுத்தவும். உங்கள் Share மூலமாக பலருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரப்படும்.
0 تعليقات