இலங்கையின் நிலத்தோற்றம் - Landscape of Sri Lanka

இலங்கையின் நிலத்தோற்றம்

நிலத்தோற்றம்: பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.

நிலைப்பட அந்தலைகள்:

மிகத் தாழ்ந்த புள்ளி: இந்து சமுத்திரம் 0 m

அதியுயர் புள்ளி: பிதுருதலாகலை 2,524 m

இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

நிலப் பயன்பாடு:

பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்: 14%

நிலையான பயிர்: 15%

நிலையான புல்வெளிகள்: 7%

காடுகளும் மரச்செறிவுகளும்: 32%

ஏனையவை: 32% (1993 கணக்கீடு)


நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்: 5,500 சது. கிமீ(1993 கணக்கீடு)

இயற்கை அழிவுகள்: அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.


சூழல் - தற்காலச் சிக்கல்கள்: காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.

சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:

உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள். கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات