கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அன்னமான அன்னை.
அன்னையே உன் அன்பிற்கு
இல்லை ஈடு உன் அர்ப்பணிப்பின்றி
ஒளிர்ந்து இருக்காது வீடு
தாயே உன் எண்ணத்தில் இருந்ததில்லை என்றும் கேடு
தாழ்விலும் தவழ்ந்து வந்து கரையேற்றினாயே மேடு
எங்களை வளர்க்க அலைந்தாயே எத்தனையோ காடு
உந்தன் கருணை இன்றி என் கையில் ஏது ஏடு
தன்னலமில்லா ஒருவர் உண்டு என்றால்
தாய் இன்றி உலகில் வேறு ஏது வாழ்வின் ஆதாரமும் நீயே
ஆணிவேரும் நீயே வாழும் அவதாரமும் நீயே
வழிகாட்டும் அறநெறியும் நீயே
அன்னையே நீ இன்றி ஏது உலகு- வாழ்வில்
அன்பும் அறமும் நீ தந்த நீங்கா உறவு
அன்னையே உன் மொழியே என்
முதல் மொழி நீ தந்த வழியே நாளும்
தேடும் நல்வழி எங்களை வளர்க்க அலைந்தாயே
எத்தனையோ காடு உந்தன் கருணை இன்றி
என் கையில் ஏது ஏடு
தன்னலமில்லா ஒருவர் உண்டு என்றால்
தாய் இன்றி உலகில் வேறு ஏது
வாழ்வின் ஆதாரமும் நீயே ஆணிவேரும் நீயே
வாழும் அவதாரமும் நீயே வழிகாட்டும் அறநெறியும் நீயே
உன்னையன்றி உடனிருக்கும் உயிர்ப்பான தெய்வம் ஏது?
நன்றி - T. Raj
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 تعليقات