கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை மாண்புமிகு ஆசிரியரை நினை…
மேதைகள் பலர் உருவாகலாம் அதில்
சாதைனைகளும் சில நிகழலாம்…
வீட்டிலிருக்க நேரம் போதவில்லை
பள்ளியே பாதி வாழ்க்கையை தின்றுவிட்டது
என்று எண்ணம் கொண்டவரின் கனிவான கவனத்திற்கு…
நின்று நிதானித்து பாருங்கள்
பெற்ற பிள்ளைக்கும் மேலாக
உற்ற துணையுடன் உங்கள் கரம் பற்றிய
அப்பழுக்கற்ற ஜீவன் ஒன்று!
உங்கள் பின்னாலே நின்றுகொண்டிருக்கும்…
இன்னும் எத்தனை தடவை வீழ்ந்தாலும்
தோளில் தட்டி எழுப்பி விண்ணை முட்டும்
பெருமைக்கு தன்னை உருக்கி உன்னை
சாதிக்க பிறந்தவன் என்று திரண்டுருண்ட
வெண்ணெயை உன்னச் செய்யுமே…
மண்ணில் போட்ட விதை எல்லாம் மரமாவதில்லை
தன்னை நம்பி வந்தவர்களை தடம் மாற்றுவதும் இல்லை
கண்ணைத் திறந்து பாருங்கள் உன்னை உயர்த்திய
கரம் இன்று தளர்ந்து கீழே வீழ்ந்தாலும் - தரம்
உயர்த்தியே பொய்யில்லா மெய்யாய் நிற்குமே!
மாணவச் செல்வங்கள் என்பது மந்திரச் சொல்
அதற்கு ஆசிரியர் பெருமக்களே அடையாளச் சொல்…
அந்த ஆசிரியரை ஒவ்வொரு கணமும் நினை
அதுவே வாழ்வில் நீ பெற்ற இறையன்பின் துணை…
நன்றி - கவிஞர் முனைவர் அ.ஞானவேல்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات