தமிழ் கவிதை தாய்மை (Tamil Kavithai Motherhood)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தாய்மை

தமிழ் கவிதை தாய்மை             

செவிலித்தாய் தாய் ஈன்றெடுக்க 

தயவோடு  தாங்கும் இன்னொரு தாய் 

இந்தச் செவிலித்தாய் தாயின் தாலாட்டுக் கேட்கும்  

முன்னே தாய்மொழி கேட்டதும்  செவிலித் தாயால்


குழந்தையைக் குளிப்பாட்டி தாய் மகிழுமுன்னே 

குளிப்பாட்டிவிட்டவள் செவிலித்தாய் 

ஆணோ பெண்ணோ  உறவுகளின் நோய் கண்டு  

ஒதுங்கும் போதும்  ஓடிவந்து சேவை செய்வாள் 


இரத்தம் சீழ் துடைக்கும் போது 

சேர்ந்து துடைக்கிறாள் கண்ணீரையும். 

உறவுகள் ஓடிவிட  உண்மை உறவாய்  

உணவை  உண்பிப்பாள் உடையும் உடுத்தி விடுவாள் 


தனக்குள்ளே வேதனைகள் தாங்காமல் 

இருந்தாலும்  தாயாகப் பணி செய்வாள் 

தானே தொடத் தயங்கும் காயங்களை 

தயங்காமல் துடைத்து விட்டு மனதார மருந்திடுவாள் 


நோயாளி வரும்போது செவிலித்தாய் 

முகம் காண பறந்துவிடும் பாதி நோய்கள் 

தாயாய்  சகோதரியாய் தைரியமூட்டுபவளாய்        

இருக்கிறாள்  செவிலித் தாய் 

வழிபாட்டுத் தலங்களில் நடப்பதில்லை 

சாமிகள் மருத்துவமனைகளில் நடக்கின்றது. 

நன்றி - C. Elakiya

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..  



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات