கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தாய்மை
“தாய்மையே” பிரபஞ்ச அங்கம் எனப்போற்றுதே பார் எங்கும்
நீதியே உம்மை வணங்கும் எம் செந்தமிழின் பைந்தமிழே நும்
வீரமே பாரத்த்தாயின் திலகமே
என்னே !! உமது தன் நலமற்ற
தன்மையே உம்மால் பேச்சற்றும்
மூச்சற்றும் மிதக்கிறேன் காரணம்
“ நீர் “எமக்கு நீராவதால் தானே.
பாரினில் நித்தம் நித்தம் மிளிரும்
சுடரே கண் இமைக்கும்
நொடியிலும் அன்பு முகிலின்பாற் மழையைப் பொழிபவளே
தாம் எந்தன் மொழி மூச்சில் கலந்த செங்கையே எம்மை
சுமக்கும் தாய்மையே !!
யாம் உனைஆராதிக்கிறேன்
தீப ஒளியாய்அல்ல
எனது குருதி சிந்தும் விழியாய்
நன்றி - கி் ரா வெங்கடேஷ்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
0 تعليقات