தமிழ் கவிதை மழையில் காதல் (Tamil Love in the Rain)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை மழையில் காதல்

தமிழ் கவிதை மழையில் காதல்  

சொட்டு சொட்டாய் சிந்தும் தண்ணீர்

தீயோடு சேரட்டும் தண்ணீர்

தீ கலந்தபின் என் நெஞ்சில் உன் ஞாபகம் வந்தது

இதமான உணர்ச்சி மற்றும் சுகம் தந்தது

உன் ஞாபகம் வந்தவுடன் என் ஈரமான உடலை தூக்கி சுமப்பாய் என் அன்பே

என்னை குழந்தைப்போல் கொஞ்சி தாலாட்டுவாய் என் அன்பே

நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே


ஆருயிரே என் அன்பே

உன் பெயர் என் உதடுகளில் வந்தது 

சாக்குபோக்கு சொல்லி பல முறை உன்னை அழைக்க நேர்ந்தது

சுற்றி சுற்றி மழைக்காலம் வந்தது ஓடியது

நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே

நான் மூழ்கிய நதிப்போல கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்


காற்று வாங்கி கொண்டிருந்தேன்

நீ மின்னலாய் நுழைந்தாய் என் நெஞ்சில்

காற்றும் இதமாக ஓடியது சுகம் தந்தது என் நெஞ்சில் 

நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே

சொட்டு சொட்டாய் சிந்தும் தண்ணீர்

தீயோடு சேரட்டும் தண்ணீர்

நன்றி - M. மனோஜ்குமார்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..  



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات