கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வானம் எல்லையில்லை
வெள்ளையா? கருப்பா?
உன் வண்ணம் என்னவோ?..
சில நேரம் சிவப்பாய்...
சில நேரம் இளஞ்சிவப்பாய்...
என்றேனும் ஓர் நாள் ஏழு வண்ணம் கொண்டு சிரிப்பாய்...
என்றென்றும் இரவில் உன் முத்துக்களால் ஜொலிப்பாய்...
உன் மனசு எவ்வளவு வெள்ளை...
கள்ளம் கவடமே இல்லை...
ஆனால் அவ்வப்போது ஒன்றாய் சூழும் கருமேகம்...
அதுவும் என்ன சில நிமிடங்களில் மாறியாய் பொழியத்தானே...
பல வித்தைகள் உண்டு உனக்கு
காற்றைப் பிடித்து மேகமாக்குவாய்...
அதில் நீரை தேக்கி வைக்கிறாய்...
மின்னல் என்ற வெளிச்சத்தை காட்டி காட்டி மறைக்கிறாய்...
இரவின் மடியில் தலைசாய்ந்து படுத்தால்...
என் கண்ணின் முன் நீ தானே...
உன் கண்களை எண்ண எனக்கு வயதில்லை...
உன் நெற்றி போட்டு மட்டுமே..
மனிதரில் பலர் உன்னை போல் உள்ளனர்...
ஆனால் அவரோ உன் கண்களைப் போல் தோரற்றத்தில் சிறிதாகவும் எண்ண முடியாமலும் ஆங்காங்கே உள்ளனர்...
அவர் அனைவரும் தெரிவது உன் நெற்றி பொட்டில் தான்...
இனி உன் அழகை சொல்ல வார்த்தை இல்லை...
என்றும் வானம் எல்லை இல்லை....
நன்றி - Vaishnavi Jayaraman
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات