கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை பெண் சிசு கொலை
நான் உன்னிடம் தாய் பால் கேட்டேன் நீயோ கள்ளிபால் தந்தாய்..
ஏன் அம்மா பெண்ணாய் பிறப்பது பாவம் என்றால் உன்னை எந்த பாவத்தில் சேர்ப்பது...
கடவுள் தந்த வரம் என்றும் நினைக்கவில்லை
உன் காதல் தந்த பரிசு என்றும் எண்ணவில்லை
நீயும் என்னை போல் பெண் என்று கூட ஏன் உணரவில்லை அம்மா....
ஒவ்வொரு நொடியும் என் வருகைகாக காத்திருந்தாய் நான் பிறந்ததும் உதறிவிட்டாயே ஏன் அம்மா
வயிற்றிலிருந்து வெளியேறிய அசதியில்
என் பிஞ்சு விரல் கொண்டு உன் மார்பு தடவினேன் தீண்டத்தகாதவள் என்று ஒதிக்கிவிட்டாயே ஏன் அம்மா....
என்னில் உன்னை காணவில்லையா நீ..
என்னில் தான் உன்னை காணவில்லை
என்னில் என் தந்தை கூட காணவில்லையே நீ.....
நீ நினைத்தது போல் உன் தாய் நினைத்து இருந்தால் இவ்வுலகில் நீ ஏது அம்மா.....
பாவத்தின் சம்பளம் மரணமாம் உன் வயிற்றில் பிறந்த பாவத்திற்கு
பரிசாக தான் என்னமோ மரணம் எனக்கு தந்துவிட்டாய்......
போகிறேன் அம்மா உன் மகிழ்ச்சிக்கு என் உயிர் பலி தந்து...
நன்றி - சரண்யா பிரகாஷ்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات