தமிழ் கவிதைகள் - உழவில்லையேல் உணவில்லை (Tamil Kavithai - vivasayam)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதைகள் - உழவில்லையே உணவில்லை

தமிழ் கவிதை - விவசாயம்

விதைப்பவன்  ஒருவன்  உலகிலே,
   இதை  மதிக்கிற  மனிதனும் கடவுளே,

விதைப்பவன்  காத்திடும்  வரையிலே,
   வரும்  தடைகளும்  தகர்த்திடும் முடிவிலே,

நம்மை   நாமே  விதைத்தாலே,
   கிடையாது   வேதனை   வாழ்விலே,

மழை  போலே    பொழிந்தாலே,
    பல   கோடி   உயிர்கள்   மண்ணிலே,

போகின்ற   வழியெல்லாம்  வயலிலே, 
    நெர்மணியை  காணலாம் கண்ணிலே,

இன்றைய   உழவனின்  உழைப்பிலே 
    நாளைய  உணவு நம், உள்ளங்    கையிலே,


உணவை   மதிப்போம்   வாழ்விலே,
    உழவனை  காப்போம்  கருவிலே,

எதிர்காலத்தை  மீட்போம்  எளிதிலே,
   பல  உழவர்களை   படைப்போம் இவ்வுலகிலே.

நன்றி - தமிழச்சி மு.அருந்ததி.

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்



இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات