கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை - முதிர்ந்த மலர்
தேநீர் குவளைகளும்திகட்டும் இனிப்புகளும்வாயிலில் செருப்புகளும்தினம் நிரம்பி தான் வழிகின்றன..!அவள் மனமெனும் மாய இருளில்அழுந்திக் கிடக்கும் ஆழ் உணர்வுகளில்அமிலம் கூட்டி இராசயன கழிவுகளாய்கவலைகளை உரமாக்கிட..!விழிப்படலத்தில் விழுந்திடாமல்சன்னல் வழி இரசித்த ஆண் முகங்கள் ஏனோ,அவளுக்கு அத்தனை அழகாய் தெரிந்திடவில்லைதெரிந்திடவும் காரணமில்லை..!கூடிவந்ததா?அமைந்து விட்டதா?பரிகாரம் செய்தீரா?உடலில் குறையுண்டோ?காதல் கீதல்..ஊசியாய் உதட்டு வார்த்தைகள்செவிக்கு திகட்டும் கீர்த்தனைகள்அலங்கார பொம்மையாய்ஆட்டு சந்தையாய்அவசர பொருளாய்அவள் மனமும் உடலும்விற்பனைக்கு தயாராய்..!அவர்கள் அதன் போக்கில்அகவை அதன் போக்கில்கனிந்திடுமா..? உதிர்ந்திடுமா..?இந்த முற்றிப்போன பூ..!
நன்றி - இலக்கியா சுப்பிரமணியன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
2 تعليقات
Super dear.. All the best
ردحذفசூப்பர் மா வாழ்த்துகள்
ردحذف