கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை - பிறழ்வுகள்
காரும் கோடையும் கலக்கக் கண்டேன்
குளிரும் பனியும் குறுகக் கண்டேன்
புயலும் வெள்ளமும் அருகக் கண்டேன்
பருவங்கள் ஆறும் மாறிடக் கண்டேன்
சுகந்தரு சூழல் பிழையுறக் கண்டேன்
வளியும் நதியும் பிணியுறக் கண்டேன்
வற்றிய உள்ளமே மாந்தரிடம் கண்டேன்
புதியன புவியைப் புரட்டிடக் கண்டேன்
பூமியின் ஓலங்கள் போரில் கண்டேன்
வாழ்வின் சுமைகள் வரிகளில் கண்டேன்
இருப்பினும் எண்ணுவன் வாழ்வு இனிதே!
நன்றி - சபா வடிவேலு
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 تعليقات