கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
ஜனநாயகம் - Democracy
ஜனநாயகம் என்றால் மக்களால் நான் மக்களுக்காகவே நான்
ஜனநாயகம் என்றால் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய, மக்களின், மக்களே
ஜனநாயகம் என்றால் மக்களின் பிரதிநிதிகள் மக்களால்
ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக்களால்
ஜனநாயகம் என்றால் மக்களாட்சி
நமது முக்கிய கடமை ஒரு விரல் புரட்சி.
இதில் ஒவ்வொருவரும் தொட்டு பார்க்க வேண்டும் அவரவரின் மனசாட்சி,
இதற்கு உலகமே அத்தாட்சி
ஜனநாயகம் என்றால் ஒரு நாட்டிற்கான பாராளமன்ற அமைப்பு அரசாங்கம்
மக்கள் கடவுள் என்றால் இது கடவுளின் ராஜாங்கம்
இதில் முடிவெடுத்தல் மக்களின் ஒரு அங்கம்
மக்களின் எல்லாம் அதிகாரங்களும் இதில் அந்தரங்கம்
ஜனநாயகம் என்பது முகப்புரையில் ஒரு முக்கிய சொல்லாகும்.
இந்த முகப்புரையே நேருஜியின் அறிமுக உரை மற்றும் அறிக்கையாகும்.
இது பல சிறப்பம்சங்கள் கொண்ட அறிக்கையாகும்.
இதுவே மக்களுக்கு ஒரு காணிக்கையாகும்
நன்றி - M.மனோஜ் குமார்
0 تعليقات