கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
தன்னிலை மாறும் மாணவர்கள்
பட்டாம் பூச்சி போல் பறந்து பள்ளி பருவம் கடந்து
பகுத்தறிவு மேம்பட பாடம் பல கற்க கல்லூரி ஒன்றை நான் கண்டேன்
இளமை பருவத்திலே இன்பம் பொங்கும் தருணத்திலே
நண்பர்கள் கூட்டம் சூழ்ந்திடவே நாட்கள் தோறும் மகிழ்ந்திடவே
நான் கண்ட பருவம் கல்லூரி சென்ற தருணம் நாட்குறிப்பு எழுதவோ நாள் இல்லை
நாங்கள் ஓய்வெடுக்க நேரமில்லை ஆசான்
அறிவுரைகளை எளிய முறையில் கற்றறிய எண்ணிய எண்ணங்களை
எழுப்பிய சந்தேகங்களை சங்கடம் இன்றி தெளிவாய் கேட்டறிய பகுத்தறிவு மேம்பட
பல்நோக்கு பாடங்களை பல கற்க கல்லூரி காலம் கடல் அலைப்போல்
அடித்து செல்லும் நேரம் ஓயாமல் ஓடும் ஓடம்
ஒழிவின்றி ஒளி வீசும் கல்லூரி காலம்
கனா காணும் காலங்கள் கனவுகளை நினைவாக்கும் தருணங்கள்
சவால்களை பல சந்தித்து
சரித்திரம் படைக்க உகந்த நிமிடங்கள்
நான் கடந்து வந்த கல்லூரி காலங்கள்....
மாணவர்கள் ஆகிய நாங்கள் மாறும் எங்கள் நிலைகள்....
நன்றி - ஸ்ரீதேவி வெங்கட்ராமன்
0 تعليقات