கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
சமையல் அறையில் நான்
விதியின் வித்தையால் நான் சென்றடைந்ததோ
கல்விக்காக கல்லுரியின் விடுதி
அகவையில் அளவறிந்து வாழ்ந்தவர்கள்
ஆதரவு இன்றி அடைக்களம் அடைந்தோ
முதியோர் இல்லம் என்னும் விடுதி
மழலைப் பருவத்திலே பாதுகாப்பு இன்றி
ஆதரவு தேடினேன் அனாதை இல்லம் என்னும் விடுதி
கட்டிய கணவன் மகிழ
என்னவனுக்காக நினைத்து பெண்ணவள்
அடைக்களம் கொண்ட தோ சமையல் அறை விடுதி
சிறு வயதில் தவறுகள் செய்து அரசால்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி ஒன்றோ.
சிறுவர் சீர்திருத்த பள்ளி அறை விடுதி
கடவுள் தனித்து நிற்பதோ கருவறை
குழந்தைகள் மலர்ந்ததோ தாயின் கருவறை
படிப்புக்காக பள்ளி அறையில் அமர்ந்து இருந்தேன்
இளம் பருவத்தில் பருவம் அடைய தனி அறையில் ஒதுங்க இருந்தேன்
என்னவன் மகிழ வைக்க அறை ஒன்றில் நான் காத்திருந்தேன்
உன் இனியவளாய் நான் மாற படுக்கை அறையை பகிர்ந்து வந்தேன்
வீட்டிலே சில அறைகள்
நம் மனதிலே பல அறைகள்
கல்வி அறைக்கு செல்ல வேண்டிய பெண்கள்
கலவி. அறைக்கு சென்றடைந்தது ஏனோ
பகுத்தறிவு அறை செல்லாததால்
பெண்களின் அறை சிற்றறை தானோ
அடுப்படி நுழைய படிப்பு அறிவு இல்லா பெண் கண்டோம்
சமையல் அறையில் மீண்டு வருவோம்.....
அறைகள் பல இருக்க அவைகளை
கடந்து வருவோம்....
1 تعليقات
Sirappppu👏👏👏👏pengalin valkai nilllai👍💯🤝
ردحذف