கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil )
இயற்கை - Natural
உயிர்கள் நிறைந்த உலகில்
உயிரை கொள்ளும் நோய்கள் ஆயிரம்
நம்முள் வலம் வ௫ம் நோய்கள் ஏராளம் ....
அதனால் நம்மை காக்க மேற்கோள்வோம் சுகாதாரம்
கி௫மிகள் பல பரவ கி௫மி நாசினிகள் வகைகள் வந்தோ பற்பல...
கைகளை கழுவிடவே கிருமிகளை நீக்கிடுவோம்
மரங்களை பல நடுவோம்
நம்மை காத்திட முன் வருவோம்
ஆக்ஸிஜனை காத்திட ஆண்டு தோறும் மரம் வளர்போம்
ஆயுள் காலம் கடந்திடவே
கார்பன் டை ஆக்சைடை விரட்டி விடுவோம்
காற்றை மாசடையாமல் காத்திடவே
நிறுவனங்கள் வெளியிடும் புகையை நிறுத்தி வைப்போம்
பற்பல ஆண்டு கடந்திடவே
பழமைகளை காத்திட பயன் அடைவோம்
நீண்ட ஆண்டு வாழ்ந்திடுவோம்..
இயற்கை உரங்களை பயன்படுத்த
செயற்கை உரங்களை தடுத்திடுவோம்
நோய்கள் பரவாமல் நம்மை பாதுகாத் திடுவோம்
கழிவறை பயன்படுத்தி மண்வளம் காத்திடவே
வீடு தோறும் தனி கழிவறைகள் கட்டிவைப்போம்...
மழைநீர் தேங்கிடவே குடிநீர் சேகரிப்போம்...
தினமும் குளித்திடவே வழக்கம் படுத்தி வியாதிகளை விரட்டியடிப்போம்...
அறிவியல் வளர்திடவே ஆய்வுகூடங்கள் பல நிறுவ
ஆண்டுகள் தோறும் மருத்துவத்தை நாம் மதிப்போம்..
மருத்துவர்கள் பல கொண்டு
மருந்துகளை புதுப்பிப்போம்...
நாகரிகம் மாறவே நோய்களை
களை அகற்றி நாம் வாழ்திடுவோம்
இயற்கை வளம் பாதுகாத்து
இனி வரும் காலம் நாம் நோய்கள் இன்றி கடந்து வருவோம்
வ௫ங்காலம் நோய்கள் இன்றி மகிழ்வோம்...
தேங்கி கிடக்கும் கழிவுகள்
தேவையின்றி பரவிடும் நோய்கள்
சுற்றுச்சூழல் காத்திட கழிவுகள் அகற்றி விடுவோம்
வீதி ஓரம் குப்பை தொட்டி வைப்போம்
வியாதிகள் பரப்புவதை எளிதில் தடுப்போம்....
பழமை தந்த தோ முதல் மருந்து
அதை கடைப்பிடிக்காதே பெரும் தவறு
மாட்டு சாணம் கிருமிகளை அழிக்கும்
வாசலிலே பயன்படுத்த அவை நம்மை நோய்கள் இன்றி வாழ வைக்கும்
0 تعليقات