கவிதை போட்டி (Tamil Kavithai Competition 2022 - Sltamil)
கடைசி பாட்டு
யாருக்கு தெரியும் எது யாருக்கு கடைசி பாட்டு
இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் அவரவருக்கு இது தான் கடைசி பாட்டு
காதலில் பிரிவு ஏற்பட்டால் காதலனும் காதலியும் பாடுவார்கள் கடைசி பாட்டு
விவாகரத்து ஆனால் கணவனும் மனைவியும் பாடுவார்கள் கடைசி பாட்டு
இறந்தவர்களுக்கு சாவு வீட்டில் பாடும் ஒப்பாரியே அவர்களின் கடைசி பாட்டு
ஒரு சிறை கைதி இறக்கும் முன் தூக்குமேடையில் பாடுவான் கடைசி பாட்டு
சுதந்திர போராட்ட தியாகிகள் அன்னியர்களை விரட்டி அடித்து சுதந்திரம் வாங்கி தந்து பாடினார்கள் கடைசி பாட்டு
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு விடையளிப்பு விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பிரியாவிடை விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு
ஊழியர்கள் அலுவுலகத்தில் வேலை முடித்துவிட்டு, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு
பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு
ஒரு குழந்தை பெரிதாக வளர்ந்து முதல் முதலில் பள்ளி செல்லும்பொழுது அம்மா அதற்கு பாடுவாள் கடைசி பாட்டு
மூன்றாம் பிறை” படத்திலிருந்து "கண்ணே கலைமானே" தான் கவியரசுகண்ணதாசனின் கடைசி பாட்டு
"காவிய தலைவன்' படத்திலிருந்து "அல்லி அர்ஜுனா தான் கவிஞர் வாலியின் கடைசி பாட்டு
நன்றி - M.மனோஜ் குமார்
0 تعليقات