இலங்கையின் கலாசாரம் - Culture of Sri Lanka

 
இலங்கையின் கலாசாரம்

இலங்கையின் கலாசாரம்

லங்கையின் கலாசாரம் பல்வேறுபட்ட காரணிகளால் தாக்கம் செல்லுத்தப்பட்ட போதிலும் அது தன்னுடைய புராதன அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை அதன் நீண்ட வரலாறு மற்றும் பௌத்த பரம்பரையினால் கூடுதலாக தாகத்திற்கு உள்ளாகியது. இந்நாடானது மிகுந்த வளமுள்ள கலைத்திறனான பாரம்பரியம் மற்றும் இசை, நடனம், காட்சிக் கலை ஆகிய நுண் கலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

 இலங்கையர்களது வாழ்க்கை முறையானது அவர்களுடைய சமையற்கலை ,திருவிழாக்கள் மற்றும் விளையாட்டு முறைகளில் பிரதிபலிக்கின்றது.இலங்கையில் பல்வேறுபட்ட கோணங்களிலும் தென் இந்தியர்களின் வருகை வெளிபடையாக செல்வாக்கு செலுத்துகின்றது.மேலும் போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் , பிரிட்டிஷ் ஆகியவர்களின் குடியேற்றமும் சில துறைகளில் செல்வாக்கு செல்லுத்தி வருகின்றது .வெளிநாடுகளில் இலங்கையின் கலாசாரமானது இலங்கையில் காணப்படும் துடுப்பாட்டம் , உணவு , [[ஆயுர்வேதம்], சமய உருவங்களான பௌத்த கொடி மற்றும் கலாசார ஏற்றுமதிகளானதேநீர் , கறுவா, இரத்தினக்கல் ஆகியவற்றின் காரணமாக பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது .ஒவ்வொரு பிராந்தியத்திலும் இலங்கையின் கலாசாரமானது வேறுபட்டு காணப்படுவதன் காரணமாக இலங்கை கலாசாரத்தில் பல்வகைமையினை காணக்கூடியதாக உள்ளது .
இலங்கையில் காணப்படும் மொழிகள்
சிங்களவர்கள் அவர்களின் தாய்மொழியாக சிங்களத்தினையும் தமிழர்கள் அவர்களின் தாய்மொழியாக தமிழினையும் பேசுகின்றனர். மேலும் ஆங்கிலமும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இலங்கையில் 16 மில்லியன் மக்கள் சிங்கள மொழியினை பேசுகின்றனர் . இதில் 13 மில்லியன் மக்கள் சிங்கள மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.இது இலங்கை அரசியல் யாப்புக்கமைய அங்கீகரிக்கப்பட்ட மொழியாக கருதப்படுகின்றது. தென் இந்தியாவிலிருந்து தழுவப்பட்ட தமிழ் மொழியும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.



பண்டிகைகளும் விடுமுறைகளும்

புத்தாண்டு

இலங்கையின் மிகப்பெரிய கலாசார நிகழ்வாக சிங்கள தமிழ் புதுவருடம் ( சிங்களத்தில் அழுத் அவுருது , தமிழில் புத்தாண்டு என்றும் அழைக்கப்படும் ) கருதப்படுகின்றது . இப் பண்டிகையானது சித்திரை மாதத்தில் சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயரும் போது கொண்டாடப்படுகிறது. வழமையாக பழைய ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு பிறக்கும் நேரமானது பொதுவாக நள்ளிரவுகளில் இடம்பெறாது. இப் புதுவருட பிறப்பானது ஜோதிடர்களால் கணிக்கப்பட்ட விஷேட சுபநேர கால வரையறையில் இடம்பெறும். இப் புது வருட பிறப்பின் போது அனைவரும் தங்களது பிற வேலைகளை விடுத்து இறை வழிபாட்டிலும் பாரம்பரிய விளையாட்டுக்களிலும் ஈடுபடுவர்.இதன் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய உடையினை அணிவர் . இவ் ஆடைகள் மிகவும் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். எனவே இவை கழுவப்பட்டு சுத்தமானதாக இருத்தல் அவசியம் .

வாழ்க்கை முறை

சமையற்கலை

இந்தியாவானது குறிப்பாக கேரளாவானது இலங்கையின் சமையற்கலையில் செல்வாக்குச் செலுத்துவதுடன் ஏனைய குடியேற்றவாசிகள் மற்றும் வெளிநாட்டு வியாபாரிகளும் இலங்கையின் சமையற்கலையில் செல்வாக்கு செல்லுத்தி வருகின்றனர். இலங்கையர்கள் நாளாந்தம் சோற்றினை பிரதான உணவாக உண்கின்றனர். அதேவேளை விசேசமான வைபவங்களிலும் இவ்வுணவினை காணலாம். காரமான கறி வகைகள் மதிய உணவின் போதும் இரவு உணவின் போதும் விருப்பமான உணவாக காணப்டுகின்றது. மிகப்பிரபல்யமான அல்கஹோல் பானமாக சாராயம் கருதப்படுகின்றது. பாம் மரச்சாரில் இருந்து இவ் அல்கஹோல் தயாரிக்கப்படுகின்றது. சோறு, கறி உணவுவகைகள் பல்வேறு விதமாக தயாரிக்கபடுகின்றது. இலங்கையர்கள் அப்பத்தினையும் உணவாக உட்கொள்ளுகின்றனர். இவ்வுணவினை இலங்கையின் எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

பெரும்பாலான உணவு வகைகள் அவித்த சோற்றினையும் காரமான கறிகளையும் உள்ளடக்கியதாக காணப்படும்.அடுத்து எல்லோருக்கும் தெரிந்த சோற்றுணவாக பாற்சோறு காணப்படுகின்றது.இலங்கையில் காணப்படும் கறிகள் இறைச்சி மற்றும் மீன் கறிகளிற்கு மட்டும் வரையறுக்கப்படாது மரக்கறி மற்றும் பழ வகைகளையும் உள்ளடக்கிய கறிகளினையும் காணக்கூடியதாக உள்ளது.இலங்கை உணவினை எடுத்துகொள்ளும் போது அது ஒரு பிரதான கறியினை கொண்டிருக்கும் (மீன்,கோழி இறைச்சி,ஆட்டுக் கறி)அத்தோடு பல்வேறு விதமான பருப்பு வகை ,மரக்கறி வகைகையினை உள்ளடக்கிய வேறு கறிகளும் காணப்படும்.இத்துடன் சட்னி,ஊறுகாய்,சம்பல் போன்ற பக்க உணவுகளும் காணப்படும்.இவை சிலவேளைகள் மிகவும் உரைப்பானதாக காணப்படும். இந்தப்பக்க உணவுகளில்தேங்காய் சம்பலானது மிகவும் பிரபல்யமானது.இது தேங்காய் துருவலுடன் மிளகாய் தூள் ,மாசி,தேசிப்புளி என்பன சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.இந்த சம்பலானது பிசைந்து எடுக்கப்பட்டு சோற்றுடன் பரிமாரப்படுகின்றது.இச்சம்பலானது சாப்பாட்டிற்கு சுவை அளிப்பதுடன் சாப்பாட்டில் விருபத்தினையும் ஏற்படுத்துகின்றது.

இலங்கையர்கள் சம்பலினை விட மாலுங் என்ற உணவினையும் உணவாக உட்கொள்ளுகின்றனர்.இது அரியப்பட்ட இலைகளுடன் தேங்காய்துருவல், வெங்காயம் மற்றும் தேங்காய்ப்பால் என்பவற்றுடன் கலந்து தயாரிக்கபடுகின்றது.சாப்பாட்டிற்கு புது சுவை ஊட்டுவதற்காக இது உணவு வகைகளுடன் வைக்கப்படுகின்றது.

இலங்கையின் பல்வேறு நகரப்புரங்களிலே அமெரிக்க துரித உணவகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன . அதேவளை பெரும்பாலனவர்களினால் அதிலும் குறிப்பாக சமூகத்தில் காணப்படும் மூத்தோர்களினால் விலக்கி வைக்கப்பட்ட இந்த புதிய உணவுப்பழக்கவழக்கத்தினை பெரும்பாலான இளைய தலைமுறையினர் தழுவி வருகின்றனர்.

கலாசாரமும் மரபுரிமையும்

இலங்கை சுதேச அறிவு உள்ளடங்கிய செழிப்பு மிக்க கலாசாரமும் மரபுரிமையும் கொண்ட ஒரு நாடாகும். நாங்கள் செழிப்பு மிக்க இயற்கை மரபுரிமை மற்றும் கலாசாரம் என்ற இரண்டையும் கொண்டுள்ளோம். அதனால், எமது கலாசாரத்தையும் மரபுரிகளையும் ஊக்குவிப்பதற்கும் பேணிப்பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவகங்களுடன் தேசிய ஆணைக்குழு இணைப்பாக்கம் செய்கிறது. நாங்கள் எமது யுனெஸ்கோ உலக மரபுரிமைச் சொத்துக்களின் நிலைபற்றி மிக நெருக்கமாக தொடர் செயலில் ஈடுபடுகிறோம். அத்துடன் இந்த சொத்துக்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் பொதுமக்களினதும் தனியார் துறையினதும் பங்கேற்பைப் பெற்றுக்கொள்ளுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகளை ஊக்குவிக்கிறோம்.

எமது கலாசாரத்தின் ஒப்பற்ற அடிப்படைத் தத்துவங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல முயல்கின்ற அதேவேளையில் எமது கலாசாரத்தினதும் மரபுரிமைகளினதும் விழுமியங்களைப் பாதுகாப்பது பற்றிய பொதுமக்களின் புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு இந்த ஆணைக்குழு பல்வேறு சர்வதேச பங்காளர்களுடன் தொடர்பு கொள்கிறது. மேலும் இந்தத் துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆளணியினருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சியின் ஊடாக தம்மை விருத்திசெய்துகொள்ளுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குகின்றோம்.


இலங்கையின் கலாசார மரபுரிமைகள்

கலாசார மரபுரிமை தொட்டுணரக்கூடிய மற்றும் தொட்டுணர முடியாத என்ற இரண்டையும் கொண்டுள்ளது. இந்த மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் வகிபாகம் முக்கியமானது. மிகச் சிறந்த அமைவிடங்கள் யுனெஸ்கோவினால் உலக மரபுரிமை என பெயர்குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றிற்கு தன்னிகரற்ற உலக பெறுமதி உண்டு. இன்றைய தினத்தில், 1052 உலக மரபுரிமை அமைவிடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 814 அமைவிடங்கள் கலாசார அமைவிடங்களாகவும், 203 அமைவிடங்கள் இயற்கை மரபுரிமைகளாகவும் 35 அமைவிடங்கள் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகள் ஆகிய இரண்டும் கலந்தவையாக இருக்கின்றன.

உலக மரபுரிமை பட்டியலில் சேர்த்துக்கொள்ளுவதற்கு, அமைவிடங்கள் உலகில் மிகப் பெறுமதி மிக்க மிகச் சிறந்த இடங்களாக இருக்க வேண்டும். அத்துடன் பத்து தெரிவுசெய்யும் அளவுகோள்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டிருக்க வேண்டும்.

  • மனித படைப்பாளியான மேதையின் தலைசிறந்த படைப்பை பிரதிநிதித்துவப்படுத்துதுல்;
  • ஒரு முக்கியமான மனித விழுமியத்தைப் பரிமாற்றிக்கொள்ளுதல், நீண்ட காலத்திற்கு முற்பட்டது அல்லது உலகத்தின் கலாசார பிரதேசத்திற்குள் உள்ளது, கட்டிடக் கலையின் அல்லது தொழில்நுட்பத்தின் அபிவிருத்தியைப பற்றியது, நினைவுச்சின்ன கலைகள், நகர திட்டமிடல் அல்லது நிலத் தோற்ற வடிவமைப்பு;
  • கலாசார பாரம்பரியத்தின் தன்னிகரற்ற தன்மைக்கு அல்லது குறைந்தபட்சம் விதிவிலக்கான சான்றுபகர்தல் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கின்ற அல்லது மறைந்துபோன நாகரீகம் என்பவற்றைக் கொண்டிருத்தல்;
  • (அ) மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க படிமுறையை(களை) வெளிப்படுத்துகிற ஒரு கட்டிடத்தின் வகை, கட்டிடக்கலை அல்லது தொழில்நுட்ப சேர்க்கை அல்லது நிலத் தோற்றம்;
  • கலாசாரத்தை (அல்லது கலாசாரங்களை)ப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாரம்பரிய மனித குடியேற்றம், காணி பயன்பாடு அல்லது கடல் பயன்பாடு அல்லது சூழலுடன் மனித ஊடுருவல், குறிப்பாக மாற்றமுடியாத மாற்றங்களின் கீழ் வந்துள்ள வடுபடும் நிலை பற்றிய மிகச் சிறந்த உதாரணம்;
  • உலகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புள்ள இலக்கிய படைப்புகள் மற்றும் கலையம்சங்களுடன் கருத்துக்களுடன் அல்லது நம்பிக்கைகளுடன் நேரடியாக அல்லது உணரக்கூடிய வகையில் நிகழ்வுகளுடன் தொடர்புடைய அல்லது உயிர் வாழ்கின்ற பாரம்பரியங்கள். (இந்த அளவுகோல் ஏனைய அளவுகோலுடன் இணைத்து பயன்படுத்துவது விரும்பத்தக்கது என குழு கருதுகிறது);
  • அதிசிறந்த இயற்கை அதிசயத்தை அல்லது விதிவிலக்குள்ள இயற்கை அழகைக் கொண்டுள்ள மற்றும் அழகியல் முன்னேற்றமுள்ள உள்ளடக்கங்கள்;
  • வாழ்க்கைப் பதிவுகள் உட்பட பூமியின் வரலாற்றின் பாரிய படிநிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகச்சிறந்த உதாரணங்கள், நில வடிவங்களின் அபிவிருத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குறிப்பிடத்தக்க புவியியல் நடவடிக்கைமுறைகள் அல்லது குறிப்பிடத்தக்க புவிச்சரிதவியல் அல்லது புவிச்சரித தோற்றங்கள்;
  • நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குறிப்பிடத்தக்க இயற்கை சார்ந்த அல்லது உயிரியல் சார்ந்த பூகோளம், நன்னீர், கரையோர மற்றும் கடல்சார் இயற்கை முறைமைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சமூகம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகச்சிறந்த உதாரணங்கள்;
  • விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த உலக பெறுமதியுள்ள அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இனங்கள் உள்ளிட்ட உயிர் பலவகைமை இருந்த வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க இயற்கை வாழ்விடங்கள் உள்ளடங்கியவை




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات