இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.
வில்லியம் கொபல்லாவ 1972.05.22 - 1978.02.04
வில்லியம் கோபல்லாவ இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.
இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.
ஜே. ஆர். ஜெயவர்த்தனா 1978.02.04 - 1989.01.02
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.
ரணசிங்க பிரேமதாசா 1989.01.02 - 1993.05.01
ரணசிங்க பிரேமதாசா இலங்கையின் முன்னாள் அதிபராவர். இவர் அதிபராவதற்கு முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் பலர் இரகசியமான முறையில் கடத்தப்பட்டு பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு இவர் ஆருடத்தில் (சோதிடம்) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1993.05.01 - 1994.11.12
டிங்கிரி பண்டா விஜயதுங்கா இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 1994.11.12 - 2005.11.19
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.
இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்ச 2005.11.19 - 2015 .01.08
மகேந்திரா ராசபக்ச என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.
வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.
மைத்திரிபால சிறிசேன 2015.01.08 - 2019.11.18
மைத்திரிபால சிறிசேன என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2015 முதல் 2019 வரை பதவியில் இருந்தார். 1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.
பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
0 تعليقات