மலையமான் திருமுடிக் காரி பகுதி - 02 (Malaiyamaan Thirumudikkaari)

மலையமான் திருமுடிக் காரி | PART 2 | கடையேழு வள்ளல்கள்


மலையமான் திருமுடிக் காரி

ஒரு காலகட்டத்துல தகடூரை ஆட்சி செய்த அதிகமான் நெடுமானஞ்சி படைத்திரனும் வீரமும் கொண்ட ஒரு சிற்றரசன்.  அடுத்தடுத்து படையெடுப்புகள் அடுத்தடுத்த வெற்றிகள் இதனால் அவனுடைய நாட்டின் பரப்பளவு பரந்து விரிய ஆரம்பித்தன. இதை பார்த்த சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்புறை அதிகமான் நெடுமானஞ்சியின் தன்னுடைய நாட்டின் வட எல்லைக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்கிற சந்தேகம் வந்தது. 

இதனை ஏற்கனவே நெடுமானஞ்சிக்கும் சேர மன்னனுக்கும் வேறு சில பிரச்சனைகள்  சின்ன சின்ன பூசல்கள் இருந்துக்கிட்டே இருந்தது. தன்னுடைய நாட்டை பாதுகாக்கும் நோக்கத்தில் சேர மன்னன் தனது ஊரை சுற்றி இருக்கிற எல்லை பகுதிகள் அத்தனையையும் கைப்பற்ற ஆரம்பித்தான். ஆனால் அவனால ஒரு முக்கியமான இடமான கொல்லிக்கூற்றத்தை கைப்பற்ற முடியவில்லை.

அதுக்கு காரணம் கொல்லிக்கூற்றத்தை ஆட்சி செய்த வல்வில்ஓரி ஒரு தடையாக இருந்தான். சின்ன அரசனாக இருக்கிற வல்வில்ஓரியை சேரமன்னன் தானாவே போய் எதிர்த்தால் அது சரிவராது என சேரமன்னன் யோசிக்கும் போதுதான் அந்த இடத்துக்கு எதேர்ச்சியாக வந்தா மலையமான் திருமுடிக்காரி ஏற்கனவே மலையமான் திருமுடிக்காரியும் சேர மன்னனும் நல்ல நண்பர்கள் எப்படியாவது இந்த பிரச்சனையில் மலையமான் திருமுடிக்காரியிடம் மட்டும் கொண்டு வந்தா போதும் சேரமன்னன் யாரை எதிர்க்க நினைத்தாறோ அவரை நேரில் போய் எதிர்க்க தேவையில்லை. மலையமான் திருமுடிக்காரி மூலமாக எடுத்துக்கலாம் என யோசித்து ரொம்ப புத்திசாலித்தனமாக மலையமான் திருமுடிக்காரியிடம் இந்த பிரச்சனைகளை கொண்டு வந்தான். 

மலையமான் திரமுடிக் காரி தன்னுடன் நட்பா இருக்கின்ற அரசர்களுக்காக என்ன வேனும்னாலும் பன்னுவான் மலையமான் திருமுடிக்காரி அதுவும் தன்னுடைய நண்பன் தன் நாட்டு எல்லையை பாதுகாப்புக்காக கேட்கும்போது செய்யாம இருக்க முடியுமா? அதனால சேர மன்னனுக்காக வல்வில் ஓரியை எதிர்த்து கொல்லிகூற்றத்திற்க்கு போர் தொடுத்தான். 

மலையமான் திருமுடிக்காரி அதில் வெற்றி கொண்ட கொல்லிமலையை கைப்பற்றி சேரனிடம் ஒப்படைக்கவும் செய்தான். இதுக்கு பின்னர் திருக்கோவிலூருக்கு திரும்பிய காரிக்கு தன்னுடைய திருக்கோவிலூருக்கு வரப்போற ஆபத்து தெரியாது. ஆனா சேர மன்னனுக்கு அடுத்தது என்ன நடக்கும் என்று நல்லாவே தெரியும். அடுத்ததாக தன்நாட்டுக்கு வந்த ஆபத்து என்ன அந்த ஆபத்திலிருந்து மலையமான் திருமுடிக்காரி தன்னுடைய நாட்டை எப்படி மீட்டெடுத்தார். 

சேர மன்னன் தன்னுடைய நாட்டின் பாதுகாப்புக்கு எந்த இடையூறு வரக்கூடாது அப்படி நினைத்ததில் தவறில்லை மற்றும் நண்பனின் பாதுகாப்புக்காக மலையமான் திருமுடிக் காரி உதவி செய்ததில் தவறில்லை.

தன்னுடைய நண்பனான வல்வில் ஓரி போரில் கொல்லப்பட்டு கொல்லிமலை கைப்பற்றப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் தன்னைச்சுற்றி என்ன நடக்குது என்று தெரிஞ்சிகிட்டான் நெடுமானஞ்சி. இதை சேர மன்னன் தன்னை நோக்கி எய்த அம்புதான் என்பதையும் தெரிஞ்சிகிட்டான். தன்னுடைய நன்பனின் மரணத்திற்கு பலிவாங்கவும்  தன்னுடைய கோபத்தை சேர மன்னனுக்கு தெரியப்படுத்தவும் சேரனுக்கு துணையாய் நின்ற மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்தான் நெடுமானஞ்சி. 

திருமுடிக்காரி உடைய படைகளை பார்க்கும்போது நெடுமானஞ்சி உடைய படையின் அளவு கொஞ்சம் சிறியது தான் ஆனால் அந்த நாட்களில் ஒரு சின்ன மாற்றம் அப்போதான் அவங்க கொல்லிக் கூற்றத்தில் போர் முடிந்து திரும்பி வந்ததாதனால் காயமடைந்தும் நிறைய வீரர்கள் மரணமடைந்தும் இருந்தனர். இருப்பினும் பத்தாததுக்கு குதிரையிலிருந்து யானையில் இருந்து தேர் வரைக்கும் எல்லாமே திருப்பி போருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் மேலக அதியமான் தன் மீது போர் தொடுத்து வருவான் என்று திருமுடிக்காரி கொஞ்சம் கூட எதிர் பாக்கவே இல்லை  ஆனால் இது சேர மன்னனுக்கு இதெல்லாம்  நடக்க போகுது என்று முன்னாடியே தெரியும். 

மேலே கூறுப்பட்ட காரணங்களினால் இன்னைக்கு நடந்த இந்த போரில் மலையமான் உடைய படைகளினால் முன்னேறிச் செல்ல முடியவில்லை அதியமானுடைய படைகள் முன்னேறி அதியமான் வெற்றிபெற்று திருக்கோவிலூரை கைப்பற்றினார். 

இதுவரை எந்தப் போரிலும் தோலிவியை பார்க்காத காரி இந்த போல முன்னேற்பாடுகள் இல்லாததினால் தோல்வியைத் தழுவுவது. சேர மன்னன் செய்த சூழ்ச்சியினால் போரையே தன்னுடைய தொழிலை கொண்டகாரி அந்த போரில் தோற்றுப் போய் இருக்க மாட்டான் இந்த தோல்விக்கு பின்னார் சேர மன்னனுடைய நாட்டுக்கே வந்து சில காலம் தங்கியிருந்தான். மலையமான் திருமுடிக் காரியிடம் அப்போ நிறைய புலவர்கள் அவனை சந்தித்து நீ வல்வில் ஓரீயிடம் போரிட்டிருக்க கூடாது என்று அறிவுரை சொன்னார்கள் அது நியாயமாக இருக்கிற மாதிரி தோனினாலும் கூட இப்ப இதையெல்லாம் சிந்திக்க முடியுயவில்லை தன்னுடைய நாட்டை ஒரு பகைவன் பிடித்து வைத்திருக்கும் போது தன்னுடைய நாட்டை மீட்டு எடுப்பதைத் தவிர ஒரு வீரனுக்கு வேறு என்ன என்னம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். 

திருக்கோவிலூர் போரில் இருந்து மீண்டு வந்த படை வீரர்கள் அனைவரையும் சந்தித்து அவங்க எல்லாரையும் திரட்டி மறுபடியும் போருக்கு ஆயத்தம் ஆனான் மலையமான் திருமுடிக்காரி. பெருஞ்சேரல் இரும்புறை இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதியமான் நெடுமாநெஞ்சியை திட்டமிட்டபடி வீழ்த்த மலையமான் திருமுடிக்காரி கேட்காமலேயே அவனுக்கு படை உதவி செய்வதாக சொன்னார் இதற்கு அடுத்ததாக அதியமான் நெடுமான்நெஞ்சிக்கு ஒரு ஓலை அனுப்பப்பட்டது நீ பிடித்துவைத்திருக்கிற திருக்கோவிலூர் திருப்பிக்கொடு அப்படி இல்லை என்றால் போர் தொடுத்து வருவோம் என்று.  தன்னை விட பத்து மடங்கு பெரிய படை அளவு கொண்ட சேர மன்னனுடன் போரிட்ட தனக்கு எந்த அளவுக்கு வெற்றி உறுதி இல்ல என்பது  அவனுக்கு நல்லாவே தெரியும் ஆனா அதுக்கென்று பிடித்து வைத்திருக்கின்ற ஊர போர் புரியாமல் தான் அதை திருப்பி கொடுத்துவிட்டால் அது நம்ம வீரத்துக்கு இழுக்கு இல்லையா அதனால் திருப்பி கொடுக்க முடியாது அப்படின்னு பதில் சொல்லி அனுப்பினான் அதியமான் நெடுமாநெஞ்சி. 

அடுத்தது என்ன நடக்கும் போது தான்போர் தொடங்கியது தகடூர் முற்றுகையிடப்பட்டது அந்தப் போர் தீவிரமடைந்தது மலையமான் திருமுடிக்காரி எப்படி சேர மன்னன் படை உதவி செய்தாரோ அதே மாதிரி அதிகமான் நெடுமானஞ்சி சோழ மன்னனும் பாண்டிய மன்னன் படை உதவி செய்தார்கள் ஆனாலும் வீரர்கள் அடுத்தவர்களுடைய படையை மட்டும் நம்பி இருக்க மாட்டாங்க தான் முன்னுக்கு வந்து அந்த இடத்தில் போர் புரிவாங்க அந்த மாதிரிதான் அதியமான் நெடுமான் அஞ்சியும் மலையமான் திருமுடிக்காரியின் நேருக்கு நேர் நின்ற போது கடுமையான போராட்டத்திற்கு பின்னாடி மலையமான் திருமுடிக்காரி உடைய வேல் அதிகமான் நெடுமானஞ்சி உடைய மார்பிலே பாய்ந்தது காயமடைந்த அதிகமான தன்னுடைய அரண்மனைக்கு உள்ளே போய் அதற்கான மருத்துவங்களை செஞ்சிருக்காரு அதே நேரத்தில் சோழநாடுட்டுப் பாண்டிய நாட்டுப் படைகளின் உதவியோடு அதிகமான் உடைய படைகள் அந்த போரில் இன்னும் தொடர்ந்து நின்னுகிட்டுதான் இருந்தார்கள். 

யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வியை சொல்ல முடியாத அளவுக்கு கடுமையான ஒரு யுத்தம் நடந்துகிட்டிருந்தது சேர மன்னன் சோழ நாட்டுப் பாண்டிய நாட்டுப் படைகள் இப்படி அதியமானுக்கு உதவி செய்வாங்க என்று எதிர்பார்க்கவே இல்லை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் சேர நாட்டுப் படைகள் பின்னடைவை சந்தித்தது. அந்த நேரத்தில்தான் சோர்ந்து போய் இருந்த அத்தனை வீரர்களுக்கும் ஊக்கமூட்டும் விதமாகப் பேசினார் மலையமான் திருமுடிக்காரி இந்தப் போரில் தோற்றுப்போன திருக்கோவிலூர் திரும்பி பெற முடியாது அது மிகவும் கடினமான காரியமாகும் அதனால் தன்னுடைய பக்கம் இருக்கிற வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டி எப்படியாவது அந்த போரில் வெற்றி பெறுவதில் உறுதியாய் இருந்தான் மலையமான் திருமுடிக்காரி. 

பின்னர் போரில் பட்ட அந்த காயம் சரியாக ஆறுவதற்கு முன்னாடியே அந்த போரில் ஈடுபட வந்தான் அதிகமான் இந்த நேரத்தில் தான் தன்னுடைய போர்  உத்திகளைக் கையாண்டு மறுபடியும் அதியமானை நேருக்கு நேர் சந்தித்து இண்டாவது முறையாக மலையமான் திருமுடிக்காரி உடைய வேல் அதிகமான் நெடுமானஞ்சியின் உடைய மார்பில் பாய்ந்தது மறுபடியும் காயமடைந்த அதியமான் அந்த இடத்திலேயே காரியின் கையால் வீரமரணம் அடைந்தார். 

அவருடைய மரணத்துக்கு பின்னாடி அந்த போர்க்களத்துக்கு வந்து இருந்த புலவர்கள் அனைவரும் அதியமானை போற்றியும் அவனுக்காக வருத்தப்படும் அதே நேரத்தில் காரின் வீரத்தை சேர்த்து போற்றியும் எழுதின ஒரு நூல்தான் தகடூர் யாத்திரை. ஆனால் தகடூர் யாத்திரை எனும் நூல் முழுமையாக கிடைக்க வில்லை அதில் கிடைத்த சில பகுதிகளை வைத்துதான் இந்த போர் இப்படித்தான் நடந்தது என்று முடிவுக்கு வந்தாங்க. 

இந்தப் போரில் வெற்றி பெற்றதால் மலையமான் திருமுடிக்காரி மறுபடியும் திருக்கோவிலூரை கைப்பற்றி தன்னுடைய நாட்டுக்கு அரசனானான் இப்ப நடந்த இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு மலையமான் திருமுடிக்காரி சேர மன்னனுடன் மட்டும் தான் நட்பு அப்படியே தப்பா நினைக்காதீங்க இன்னொரு காலகட்டத்தில் சோழ மன்னன் பெருநற்கிள்ளி பிரச்சனை என்று வந்தபோது அவர் தன்னுடைய நண்பனாக இருந்த படியினால் இன்னொரு சேரமன்னனான மாந்தரஞ் சேரல் இரும்பொறையை எதிர்த்தான் இந்த மலையமான் திருமுடிக்காரி. அப்பவும் திருமுடிக்காரி தான் வெற்றி இதிலிருந்து சேர மன்னன் சோழ மன்னனும் பாகுபாடெல்லாம் கிடையாது தன்னோட நட்பாக இருந்து தன்னை நம்பி வர்றவங்களுக்கு போர் உதவியாய் இருந்தான் மலையமான் திருமுடிக்காரி. 

இது மட்டுமல்ல அந்த காலத்தில் மழை மாநாட்டை படையெடுத்து வந்த ஆரிய படைகளை புறமுதுகு காட்டி ஓடவச்சான் இந்த மலையமான் திருமுடிக்காரி அடுத்தடுத்த படையெடுப்புகள் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவு படுத்துவது மன்னர்களுக்குப் போர் உதவி செய்தது என்பதில் தன்னுடைய வாழ்நாளில் பாதி நாட்களை செலவிட்டிருந்தான் ஒரு வீரனாக இருந்தால் அவனுக்கு எதிரிகள் இருப்பாங்க. வல்லவன் என்று ஒருத்தர் இருந்தா அவனுக்கு வல்லவன் இருப்பான் அந்த வகையில் இந்த மலையமானுக்கு எதிரியாக அமைந்தது யார் அதன் பின்னாடி அவருடைய முடிவை எப்படி அமைந்தது.


அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மலையமான் திருமுடிக் காரி  பகுதி - 01

மலையமான் திருமுடிக் காரி  பகுதி - 03

நன்றி




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات