மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதியாக இந்த நளதமயந்தி கதை காணப்படுகின்றது. இருப்பினும் மகாபாரதத்தில் இடம்பெற்ற காதலுக்கு தலைசிறந்ததாக இக் கதை அமைகின்றது. இந்த கதையை கேட்பவர்களுக்கு சனிபகவானுடைய பாதிப்பு குறையும் என்றும் பிரிந்து வாழும் தம்பதியின் மறுபடியும் சேர்வதாகவும் நம்பிக்கை உண்டு.
ஒரு அடர்ந்த காட்டில் ஒரு குகைக்குள் ஒரு வேடவ தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அந்த வேடுவனின் பெயர் ஆகுகன், அவனுடைய மனைவி பெயர் ஆகுகி. இருவருமே அன்பும் காதலும் உள்ள தம்பதியினர். ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு ஒரு முனிவர் வந்தாருந்தார் அந்த முனிவரை இவர்கள் நல்லபடியாக கவனித்தார்கள். அன்று இரவு அந்த முனிவர் அவங்க வீட்டிலேயே தங்கும்படியாக அமைந்தது. அந்த குகை மிகவும் சிறியதாக இருக்கும். அந்த குகையில் இரண்டு பேர் மட்டும்தான் தங்க முடியும் . அப்படி இருக்கும்போது, பயங்கரமான குளிர் வெளியே அடித்தபோது அவன் தன்னுடைய மனைவியை தன்னுடன் வைத்திருக்க முடியாமல் குகையின் உள்ளே அந்த முனிவர் தங்கி இருந்தாலும் பரவால்லன்னு சொல்லி தன்னுடைய குகைக்குள் மனைவியை அனுப்பி இந்த ஓரத்தில தூங்கிக்கொள்ளு என்று சொன்னான். தன்னுடைய மனைவி மேல இவ்வளவு நம்பிக்கை உள்ள ஒருத்தர நான் பார்த்ததே இல்லை என்று சொல்லி அந்த முனிவர் இரண்டு பேருக்கும் ஆசிர்வாதம் வழங்கினார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த வேடுவன் ஒரு மிருகத்தால் அடித்துக் கொல்லப்பட்டதனால், அந்த துன்பம் தாங்கமுடியாத அவனுடைய மனைவியும் கூவே சேர்ந்து இறந்து போகின்றாள்.
இந்த ஜென்மம் இப்படியே முடிந்து போக, அடுத்த ஜென்மத்தில் ஆகுகன் ஒரு நாட்டினுடைய இளவரசனான நளனாகவும், ஆகுகி ஒரு நாட்டினுடைய இளவரசியான தமயந்தியாகவும் பிறக்கிறார்கள். அந்த முனிவர் ஒரு அன்னப்பறவையாக பிறக்கிறார். இந்த மூன்று பேருக்கும் எப்படி தொடர்பு வந்தது ? இந்த ஜென்மத்தில் நளனும் தமயந்தியும் எப்படி காதலிச்சி சேர்ந்தாங்க ? அதற்குப்பிறகு அவங்க வாழ்க்கையில் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வந்தது ? அதனை எப்படி எல்லாம் சமாளித்தாங்க ? என்பதுதான் இந்த நளதமயந்தி கதையில் பார்க்கப்போகின்றோம்.
நெடத நாட்டினை ஆட்சி செய்த மன்னனுடைய மகன நளன. நளன் ஒரு நாள் தன்னுடைய நந்தவனத்தில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அழகான அன்னப் பறவையை பார்த்தன், அந்த அன்னப் பறவையை காவலாளிகளின் மூலம் பிடித்து பக்கத்தில் வைத்து பார்க்கும்போது அந்த அண்ணப்பறவை நளனிடம் நீ ரொம்ப அழகா இருக்க, ரொம்ப அறிவா இருக்க, இந்த நாட்டு மக்கள் மேல பாசமாகவும் இருக்க. உனக்கு ஒரு மகாராணி வந்தா அவளும் அழகா இருக்கணும், அறிவா இருக்கணும், இந்த நாட்டு மக்கள் மேல பாசம் உள்ள ஒரு மகாராணியாகவும் இருக்கணும் அப்படிப்பட்ட ஒரு ராணி ஒரு இடத்தில இருக்கிறாள். நான் உனக்கு அவளை பற்றி சொல்லவா? அப்படின்னு சொல்லி தமயந்தியின் உடைய அழகு அனைத்தையும் மன்னனிடம் வர்ணித்தது அந்த அன்னம். இதைக் கேட்டவுடன் மன்னனுக்கு அவளைப் பார்க்காமலேயே காதல் வந்தது . அப்போது அந்த அன்னம் தமயந்தியிடம் தூது சொல்லவா என்று கேட்டது. அதற்கு நளன் சம்மதம் தெரிவிக்க உடனே பறந்து சென்ற அன்னம் தனிமையில் இருந்த தமயந்தியிடம் நளனுடைய பெருமையை ஓர் பாடலாக பாடியது. இதனால் நளன் மீது தமயந்திக்கு காதல் வந்தது.
இந்த நேரம் பார்த்து தமயந்தியின் தகப்பனார் பீமன் தமயந்திக்கு சுயம்வர ஏற்பாடு செய்தான்.இந்த சுயம்வரத்திற்கு இளவரசர் மட்டுமல்லாமல் தேவர்களும் அந்த இடத்துக்கு வந்தார்கள். அப்படி வந்த தேவர்களில் சனிபகவானும் ஒருத்தர். இவர்கள் எல்லாருக்குமே தமயந்தி மனசுல நளன் மீது ஒரு காதல் இருப்பது தெரியும் அதனால் எல்லாரும் நளனுடைய உருவத்திலேயே மாறி வந்தார்கள். இந்த சுயம்வரத்தில் நளனை அடையாளம் கண்டு அவன் கழுத்தில் மாலைபோடும் நம்பிக்கையோடு வந்த தமயந்திக்கு ஒரு குழப்பம் உருவாகிறது. அந்த இடத்தில் கிட்டத்தட்ட ஆறு பேர் நளன் மாதிரியே இருந்தார்கள் . இவர்களில் உண்மையான நளனை எப்படி கண்டு பிடிப்பது என யோசித்து பார்க்கும் போது தேவர்கள் கண்ணிமைக்க மாட்டார்கள் என்பது ஞாபகம் வந்தது இதன் மூலம் நளனை கண்டுபிடித்து மாலையை போட்டால் அவளின் திருமணம் இனிதாக நடக்கிறது .
இந்த திருமணத்திற்கு பின்னால் நளன் தமயந்தியை தன்னுடைய நாடான நெடத நாட்டுக்கு கூட்டிச்சென்றான். இந்த நேரம் சுயம்வரத்திற்கு வந்து ஏமாந்துபோன அத்தனை தேவர்களுக்கும் கோபம் வந்தது . அவர்களில் ஒருவர்தான் சனிபகவான். இவர் நளனை துன்பப் படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வர வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் நளனுடைய தந்தை நளனுக்கு பட்டாபிஷேகம் செய்து மகாராஜா அறிவிக்கிறார். நளனும் தனது செங்கோல் ஆட்சியை புரிந்தான் . இவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள்.அவர்கள் இந்திரசேனன், இந்திரசேனா ஆகும்.
ஒரு பக்கம் சனி பகவான் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.சனிபகவானுக்கு கடமையிலிருந்து தவறாத ஒருத்தரை பிடிக்க முடியாது என்று ஓர் விதிமுறை உள்ளது. இப்படியிருக்கும்போது ஒருநாள் கோயிலுக்குப் போகும்போது நளன் தன்னுடைய கால்களை சரியாக கழுவாமல் போகிரான். அப்பொழுது சனிபகவான் அவரை பார்த்து இவ்வளவு பெரிய மன்னனுக்கு காலை கூட ஒழுங்காக கழுவ தெரியல அப்படினா நாட்டு மக்களை எப்படி நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்ய முடியும். அப்படின்னு கழுவாத கால் வழியாக நளனை அவமானப்படுத்திவிட்டார்.
எல்லாருடைய வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு நேரம் காலம் இருக்கும். அதைவிட ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். நல்ல நேரம் இருக்கிற வரைக்கும் அந்த கெட்ட பழக்கம் நமக்கு எந்த துன்பத்தையும் தராது ஆனால் நமக்கு கெட்ட நேரம் வரும்போது இந்த கெட்ட பழக்கம் தான் நம்ம வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கும் அந்த மாதிரி ஒரு கெட்ட பழக்கமும் நளனிற்கு இருந்தது. அதுதான் சூதாடும் பழக்கம் . மகாபாரதத்தில் எந்த சூதாட்டம் பாண்டவர்களை தெருவில் நிறுத்திய தோ,அதே சூதாட்டம்தான் இப்ப நலனையும் தெருவில் நிறுத்தப் போகிறது. ஒருநாள் நளனுடைய அமைச்சரான புட்கரன் அதனை சூழ்ச்சியின் மூலம் சூதாட்டத்தில் நிறுத்தி அதில் நலனை தோற்கடித்து நளனுடைய நாட்டையும் ஆட்சியையும் பெற்றுக்கொண்டான். இப்போது நளன் அவனுடைய நாட்டை விட்டு காட்டுக்கு வனவாசம் போக வேண்டும் மேலும் யாருடைய கண்ணிலும் படாமல் எங்கேயாவது போய் தான் வாழனும் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து வாழும் சூழ்நிலையில் வெளியே போகும்போது தமயந்தி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அவளுடைய அன்னையிடம் கொடுத்துவிட்டு நளனை பின்தொடர்ந்து சென்றாள்.
காட்டுக்குச் சென்ற இரண்டு பேருக்கும் சரியான சாப்பாடு இல்லாமல் சோர்ந்து போய் விட்டனர். இந்த நிலையில் தமயந்தி கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் நின்றாள். உடனே நளன் தமயந்தியிடம் அவளை தந்தை வீட்டுக்கு செல் என்று கூற அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாள். இதனால் நளன் தமயந்தி தூக்கத்தில் இருக்கும் போது அவளை அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் எழுந்து நடந்து சென்றான்.அவன் அவ்வாறு எழுந்து சென்றதற்கு காரணம் என்னவென்றால், தமயந்தி நான் போய்விட்டால் தனியாகக் காட்டில் கஷ்டப்படாமல் அவளது தந்தை வீட்டுக்கு சென்று விடுவாள் என்ற எண்ணத்தில் ஆகும்.
தமயந்தி கண்விழித்து பார்க்கையில் அவளைச் சுற்றி ஒரு மலைப்பாம்பு இருந்தது அவள் பயந்து ஓடுகையில் ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். அவனுக்கு தமயந்தி மீது ஆசை ஏற்பட அவனும் அவளை துரத்தினான். இதனால் தப்பித்து இன்னொரு நாட்டுக்குப் போய் வேஷம் போட்டுக்கொண்டு பணிப்பெண்ணாக வாழ ஆரம்பித்தாள் தமயந்தி . அதே இடத்துக்கு விருந்துக்கு வந்த அவளின் தந்தை அவளை வலுக்கட்டாயப்படுத்தி தன்னுடைய இடத்துக்கு கூட்டி சென்றார் .
இப்போது தமயந்தி நளன் நினைத்தபடியே அவளது அப்பா வீட்டில் குழந்தைகளுடன் அடைக்கலமாக இருக்கிறாள். தமயந்தியை பிரிந்து சென்றபின் நளனுக்கு என்ன நடந்தது ? ஒரு அடர்த்தியான காடு வழியே நடந்து கொண்டிருக்கும் போது என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று ஒரு குரல் அவனுக்கு கேட்டது. அந்தக் குரல் வந்த திசையை நோக்கிப் பார்க்கும் போது அங்கு நிறைய மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அதில் எரிந்துகொண்டிருந்த கார்க்கோடகன் எனும் பாம்பே அவ்வாறு கத்தியது. உடனே நளன் அந்தப் பாம்பை காப்பாற்றினான். அந்தப் பாம்பு நலனுக்கு உதவும் நிமித்தமாக உருவம் மாறும் பொருட்டு அவனை கொத்தியது இதனால் நளன் கூன் விழுந்த கிழவனின் உருவம் பெற்றான். மேலும் கார்கோடகன், உனது அழகான உருவம் எப்போது வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போது இந்த உடையை போடு என்று கூறி ஒரு உடையை கொடுத்தான்.
அதை எடுத்துக்கொண்டு அயோத்தி நாட்டுக்குச் சென்றான். அங்கு ஓர் அரசனுக்கு தேரோட்டியாக இருந்தார். நளனுக்கு மிகவும் வேகமாக தேர் ஓட்ட தெரியும் அந்த வித்தையை மன்னனுக்கு கற்றுக்கொடுக்க மன்னனும்,ஒரு மரத்தில் இருக்கின்ற இலைகளை எவ்வளவு வேகமா எண்ணனும் அப்படிங்கிற வித்தையை நளனுக்கு சொல்லிக் கொடுத்தான்.
ஒரு நாட்டினுடைய மன்னனாய் இருந்த நளன் இப்போது இன்னொரு நாட்டுடைய மன்னனுக்கு தேரோட்டியாக வாழ்ந்து வருகிறான். மறுபக்கம் தமயந்தி அவளது தந்தையின் அடைக்கலத்தில் வாழ்ந்து வருகிறாள் இவ்வாறாக 12 வருடங்கள் முடிந்தன .
இந்த சமயத்தில தமயந்திக்கு ஒரு சந்தேகம் வருது. நளன் எங்கேயாவது இருக்கணும் அதனால் நளனை எப்படியாவது என்னைத் தேடி வர வைக்க வேண்டும் என்பதற்காக தனது தந்தையிடம் சொல்லி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். அவள் நினைத்தபடியே அச் சுயம்வரத்திற்கு அயோத்தி மன்னனின் தேரோட்டியாக நளன் வந்தான். நளனுடைய பாதம் அந்த இடத்தில் பட்ட உடனேயே தமயந்தியின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல அவளின் கண்கள் நளனைத் தேடியது. இப்போ சுயம்வரம் நடக்க ஆரம்பிக்குது . எல்லா மன்னர்களும் வந்து உட்கார்ந்து இருக்காங்க, அந்த நாள் அன்று தான் சனிபகவான் நளனை பிடித்து ஏழரை ஆண்டுகள் முடிவடைந்தது. இவ்வளவு தொந்தரவு கொடுத்தும் நேர்மையாக இருக்கும் நளனை பார்த்து மனம் இரங்கி சனி பகவான் அந்த இடத்திலிருந்து விலகி போகிறார் .தமயந்திக்கு சுயம்வரம் நடக்கும் காட்சியை பார்த்த நளன், உடனே கார்கோடகன் கொடுத்த அந்த உடையை அணிந்து மீண்டும் அழகிய உருவம் பெற்றான். ஏற்கனவே உள்ளுணர்வில் நளன் இங்கு இருக்கிறான் என நினைத்திருந்த தமயந்தி இப்ப முழுமையான உருவத்தில் இருந்த நளனுக்கு மாலை சூட்டி மறுபடியும் இரண்டு பேரும் சேர்ந்தனர்.
இந்த திருமணத்திற்கு பிறகு தமயந்தியின் தந்தையான பீமன் நளனிடம் உனக்கு என்ன சீர்வரிசை வேண்டும் என்று கேட்க, அதற்கு நளன் உங்களின் படைகளை கொடுங்க நான் எனது நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றான். பீமனும் நளன் கேட்ட படைகளை கொடுக்க, தனது நெடத நாட்டில் கொடூரமாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் புட்கரனை தோற்கடித்து மறுபடியும் தன்னுடைய நாட்டை கைபற்றி தன்னுடைய மக்களை செங்கோல் ஆட்சிபுரிய ஆரம்பித்தான் நளன்.
அனைத்து துன்பங்களும் நீங்கியதால் நளனும், தமயந்தியும் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது அவளுக்கு காட்சியளித்த சனி பகவான், என்ன நீங்க ரெண்டு பேரும் மன்னிக்கணும். நான் உங்களுக்கு கொடுத்த துன்பம் தவறு உங்களுக்கு ஏதாவது ஒரு வரம் ஒன்று தர விரும்புகிறேன். கேளுங்கள் என்று கூற அதற்கு நளன் தனக்காக எதுவும் கேட்காமல் நான் பட்ட கஷ்டத்தை இந்த உலகத்தில் யாருமே படக்கூடாது.நாடிழந்து, வீட்டிழந்து , அடையாளம் இழந்து எந்த மனிதனும் சுற்றி திரியக்கூடாது. என்னுடைய மனைவி பட்ட கஷ்டத்தை எந்த ஒரு பெண்ணும் படக்கூடாது. தனது கணவனைப் பிரிந்து அம்மா அப்பா வீட்டுக்கு போய் உட்காரும் ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்கு வரவே கூடாது. அதனால் இந்த நளதமயந்தி கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உங்களுடைய பாதிப்பிலிருந்து நீங்க விடுவிப்பு கொடுக்கணும் என்று ஒரு வரம் கேட்டான். இக்கதை கேற்பவர்களுக்கு இந்த நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கை உண்மையா பொய்யா என்று தெரியாது ஆனால் இந்த கதையில வருவவது போன்று நாடிழந்து, வீட்டிழந்து , அடையாளம் இழந்து திரிபவர்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி...
0 تعليقات