மூன்றாவது தவணை தொடர்கிறது | Third term resumes

 05.02.2024

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாகப் பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், உயர்தர பரீட்சை காலத்தின்போது, விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்தப் பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் எனப் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Third term resumes




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات