க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்| Risk of postponement of G.C.E Ordinary & Advanced level examination

 04.02.2024

தற்போது நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமானால், இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய கல்வி அமைப்பைப் பாதிக்கும் ஒரு சிறு சம்பவம் கூடப் பாடசாலை அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளினால் பரீட்சைக் காலம் மட்டுமன்றி பாடசாலைகளின் முழுச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியமையால், இந்தச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Risk of postponement of G.C.E Ordinary & Advanced level examination


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات