தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்தபோது கடனை வழங்குவதாகத் தெரிந்த போதிலும், KIU மற்றும் ஹொரைசன் போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (08.02.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடனுதவி வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதற்கான கற்கை நெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்தக் கடன் வழங்கப்படாமல் உள்ளதால், விரைவில் இந்தக் கடன் வசதிகளை வழங்குங்கள்.இந்தக் கடன் வசதி வழங்கப்படாததால் அவர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்





0 تعليقات