முதல் மயக்கம்...காதல் First impression...love - The Search for Talent

First impression...love - The Search for Talent

என் விழியோரம் முதல்முறை

உன்முகம் பார்த்தேன் ஒருமுறை

என்னதான் நான் நினைத்தேன் 

உன்னுள்ளே என்னை தொலைத்தேன்.!


பார்த்த கணத்தில் உணர்ந்தேன்

பாடல் தலைவன் நீதான் 

தேக்கி வைத்த காதலெல்லாம் 

தேனாறாய் பாய்வதேனோ ?


கரம் பிடிக்க வேண்டுமின்றே 

காலம் தடையில்லை காதலிக்க 

காற்றாய் மாறி உனைசேர்வேன் 

காத்திருக்க சொல்லாதே என்அன்பே !


முதல் பார்வையிலே முடிவெடுத்தேன் 

இனி என்வாழ்க்கை உன்னுடனே 

தயக்கம் துறந்து கேட்டுவிட்டேன் 

தவிர்க்காமல் உன் தோல்தருவாயா ...?

என் உடன்வருவாயா..?

நன்றி - Annam


நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil

மேலதிக விபரங்களுக்கு

👉LINK CLICK HERE👈

உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات