விமானம் வானில் பறக்கும்போது டயர் வெடித்தால் என்ன நடக்கும். (What happens when a plane blows a tire in mid-air?)

விமானம் வானில் பறக்கும்போது டயர் வெடித்தால் என்ன நடக்கும்.

முதலில் விமானத்தில் என்ன தவறு ஏற்பட்டாலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துவிட்டு மற்றவேலைகளைக் கவனிப்பர்.

விமானத்தின் டயர் வெடிப்பு என்பது விமானம் வானில் ஏறும்போது அல்லது இறங்கும் போது மட்டுமே ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விமானத்தின் டயர் எதனால் வெடிக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

டயரில் உள்ள காற்றின் அழுத்தம் அதிவேகமாக உடனே பல மடங்கு அதிகமானால் தான் டயர் வெடிக்கும்.

மெதுவாக அதிகமானால், விமான டயர்களில் பாதுகாப்பு அழுத்தம் வால்வு (pressure relief valve) காற்றை விடுவித்து விடும்.

டயர் ஒடுதளத்தில் ஓடும் போது அந்த சக்கரத்தில் மட்டும் பிரேக் சற்று பிடித்து இருந்தால் (Brake binding) வெப்பம் அதிகமாகி காற்று அழுத்தம் அதிகமாகும். அல்லது டயரில் மிகக்குறைவான காற்று அழுத்தம் இருந்தாலும் (tyre flexing) வெப்பம் அதிகமாகிவிடும் அதற்கு பாதுகாப்பாக வெப்பத்தால் உருகக்கூடிய ப்யூஸ் உள்ளது. அது உருகி காற்றை வெளியேற்றிவிடும்.

இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் டயர் வெடித்தால் விமானிக்கு டயர் வெடிக்கும் சத்தம் கேட்டால் உடனே திரும்பி இறங்கிவிடுவார். இல்லையெனில் விமானநிலைய அதிகாரிகள் ஒடுதளத்தை சோதனை செய்யும் போது டயர் துண்டுகளை பார்த்தால் விமானிக்கு அறிவித்து விடுவார்கள். அது காலதாமதமானாலும் அல்லது எந்த விமானத்தில் ஏற்பட்டது என்று சந்தேகம் இருந்தாலும், விமானி வேறு ஏதும் பிரச்சனை இல்லாமல் இருந்தால் தொடரந்து பயணம் செய்வார். இறங்கும்போது விமானநிலையத்தில் தகுந்த முன் ஏற்பாட்டுடன் விமானத்தை இறக்குவார்.

குறைந்தது நான்கு பின் சக்கரங்கள் உள்ள விமானத்தில் ஒரு பக்கத்தில் (வலது/இடது) ஒரு சக்கரம் இல்லாமல் இருந்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது

What happens when a plane blows a tire in mid-air

விமானம் வானில் பறக்கும்போது டயர்கள் உள்ளே பாதுகாப்பாக இருக்கும். வெளியே தெரியாது. ஆகவே டயர் வெடித்தால் யாருக்கும் தெரியாது. டயர் வெடிப்பது மிக மிக அரிதான விடயம். அப்படியே வெடித்தாலும், விமானம் இறங்கும்போது தான் தெறிய வரும். 

அப்படி ஆனாலும் தரையில் இறங்க சில முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் உண்டு. முதலில் விமானத்தில் இருக்கும் எல்லா எரிபொருளையும் வானில் ஊற்றி விடுவார்கள், விமானத்தின் எடையை குறைக்க. விமான தளத்தை எச்சரிக்கை செய்து விடுவார்கள். 

பிறகு அவர்கள் திட்டப்படி, பெல்லி லாண்டிங் என்று பல முயற்சிகளை செய்து தரை இறக்குவார்கள், நெருப்பு பிடித்துக்கொள்ள வாய்ப்பு என்பதால், முன்னெச்சரிக்கையாக தீ அணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் குவிக்கப்பட்டு இருக்கும். விமானத்தின் இறக்கை வழியாக எமெர்ஜெண்சி வாயில்கள் மூலம் பிரயாணிகளை வெளியேற்றுவார்கள். ஆனால் டயர் வெடிக்க வாய்ப்பு மிக் மிக குறைவே. எனினும் இதற்கும் ஊழியர்களை தயார் படுத்தி இருப்பார்கள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

إرسال تعليق

0 تعليقات