மூன்று பேரிராச்சிய முறைப் பாகுபாடு (Three Domain System of Classification)
அங்கிகளைப் பாகுபடுத்துவதற்கு மிகப் பொருத்தமானது இயற்கை முறைப் பாருபாடு ஆகும். அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு விஞ்ஞானிகுபாடு முறைமைகள் முன்வைக்கப்பட்டுள்ளன; ரொபர்ட் விட்டேகர் (Robert witா - 1967 என்பவரால் முன்வைக்கப்பட்ட ஐந்து இராச்சியங்களைக் கொண்டமைந்த பாகுபாட்டு முறை இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் கார்ள் வூஸ் (Carl woo 1990) என்பவரால் இராச்சியத்திற்கும் மேலான உயர் மட்டமான பேரிராச்சியம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று பேரிராச்சியங்களை உள்ளடக்கிய பாகுபாட்டு முறைமை முன்வைக்கப்பட்டது.
நவீன பாகுபாட்டிலிலுள்ள மூன்று பேரிராச்சியங்களும் பின்வருமாறு,
பேரிராச்சியம் - ஆக்கியா (Domain Archaiea)
பேரிராச்சியம் - பற்றீரியா (Domain Bacteria)
பேரிராச்சியம் - இயூக்கரியா (Domain Eucarya)
பேரிராச்சியம் ஆக்கியா (Domain Archaea)
இப் பேரிராச்சியத்திற்குரிய அங்கிகளில் திட்டமான முதிர்வுவழிக்கரு காணப்படுவதில்லை. எனவே இவை புரோக்கரியோற்றிக் (Prokaryotic) அல்லது அங்கிகள் எனப்படும். இவை எரிமலைகள், பாலைவனங்கள், பனிமலைகள், வெந்நீர் ஊற்றுக்கள், சமுத்திர பாதாள வலயங்கள், உவர்ச்சேற்று நிலங்கள், துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் போன்ற பாதகமான சூழல்களில் (Extreme environ ments) வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. இவை பெரும்பாலான நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு தூண்டற்பேறற்றவை என்பதால் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தி அழிக்கப்பட முடியாதவை.
உதாரணம்
Methanogens
Halophiles
பேரிராச்சியம் பற்றீரியா (Domain Bacteria)
இப் பேரிராச்சியத்திற்குரிய அங்கிகளிலும் திட்டமான முதிர்வுவழிக்கரு காணப்படுவதில்லை. எனவே இவையும் புரோக்கரியோற்றிக் Prokaryotic - வகைக்குரியவை. மேலும் இவை நுண்ணுயிர் கொல்லிகளுக்கு தூண்டற்பேறை காட்டக்கூடியவை. சிலவேளைகளில் நோயாக்கிகளாகத் தொழிற் படும் அங்கிகளாகும். வை புவியின் எல்லா வகைச் சூழலிலும் பெருமளவில் காணப்படக்கூடிய அங்கிக் கூட்டமாகும். பற்றீரியா சயனோபற்றீரியா போன்றன இப் பேரிராச்சியத்தினுள் அடங்குவன.
பற்றீரியாக்கள் மனிதனுக்கு முக்கியத்துவமாக அமையும் சந்தர்ப்பங்கள்
பற்றீரியாக்கள் மனிதனுக்கு மட்டுமன்றி ஏனைய அங்கிகளுக்கும் நோய்களை ஏற்படுத்தல்.
உதாரணம்: காசநோய், நிமோனியா, வயிற்றோட்டம், ஏற்புவலி, தொழுநோய் :
உணவைப் பழுதடையச் செய்தல்.
தயிர், யோகட், பாற்கட்டி (Cheese) உற்பத்தியில் பங்களிப்புச் செய்தல்.
தேங்காய் மட்டை, சணல் என்பவற்றிலிருந்து நார்களை பெறுதல். மற்றும் தோல் பதனிடல்.
வளிமண்டல நைதரசனைப் பதிப்பதனால் மண்ணில் நைதரசனின் அளவை அதிகரிக்கச் செய்தல்.
இறந்த சேதன உடல்களை பிரிகையடையச் செய்தல்.
பேரிராச்சியம் இயூக்கரியா (Domain Eukarya)
இப் பேரிராச்சியத்தை சேர்ந்த அங்கிகள் இயூக்கரியோற்றாக்கள் (Eukaryots) ஆகும். அதாவது திட்டமான அமைப்பாங்குடைய கருவைக் கொண்ட கலங்களாலான அங்கிகளாகும். தற்காலத்தில் புவியில் வாழும் முதன்மையான அங்கிகளாகும். இவை பல்வேறு சூழல் நிலைமைகளின் கீழ் வாழும் ஆற்றலைக் கொண்டுள்ளன. நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு தூண்டற்பேற்றைக் காட்டாத அங்கிகளாகும். அதாவது நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தி அழிக்க முடியாதவை. இவற்றை மேலும் நான்கு இராச்சியங்களாக வகைப்படுத்தலாம். அவையாவன,
1. இராச்சியம் புரோட்டீஸ்டா (Kingdom Protista)
2. இராச்சியம் பங்கை (Kingdom Fungi)
3. இராச்சியம் பிளான்ரே (Kingdom Plantae)
4. இராச்சியம் அனிமாலியா (Kingdom Animalia)
இராச்சியம் புரோட்டீஸ்டா (Kingdom Protista)
புரோட்டீஸ்டா இராச்சியத்திற்குரிய அங்கிகள் திட்டமான அமைப்பாங்குடைய கருவைக் கொண்ட கலங்களாலான அங்கிகளாகும். இவை தனிக்கல அங்கிகளாகவோ அல்லது வியத்தமடைந்த இழையங்களைக் கொண்டிராத பல்கல அங்கிகளாகவோ காணப்படும். இவை நீரைக் கொண்ட எவ்வகையான சூழலிலும் வாழக் கூடியன. இவற்றுள் பெரும்பாலானவை ஒளித் தொகுப்புக்குரியவையாகும். சில இனங்கள் மாத்திரம் பிறபோசணைக்குரியவையாகும். அல்காக்கள் புரோட்டோசோவாக்கள் ஆகியன இவ்விராச்சியத்தினுள் அடங்குகின்றன.
புரோட்டிஸ்டாக்கள் மனிதனுக்கு முக்கியத்துவமாக அமையும் சந்தர்ப்பங்கள்.
நீர்ச் சூழலிலுள்ள உணவுச் சங்கிலிகளின் முதலான உற்பத்தியாளர்களாகத் தொழிற்படல்
பங்கசுக்களுடன் இணைந்து ஒன்றிய வாழ்வுக்குரிய ஈட்டமான இலைக்கன்களைத் தோற்றுவித்தல்,
பற்றீரியா வளர்ப்பூடகம் தயாரிக்கப்பயன்படுத்தப்படும் ஏகார் உற்பத்தி.
ஐஸ்கிறீம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அல்ஜீனிக் அமிலம் உற்பத்தி. சிலவகைப் புரோட்டோசோவாக்களினால் மனிதரில் கொடிய நோய்கள் ஏற்படுத்தப்படல்.
உதாரணம் : அமீபா வயிற்றுளைவு, மலேரியா, தூக்க வியாதி (Sleeping sickness)
இராச்சியம் -பங்கை (Kingdom Fungi)
கைற்றினாலான கலச்சுவரைக் கொண்டவையும் திட்டமான அமைப்பாங்குடைய கருவைக் கொண்டவையுமான இயூக்கரியோற்றாக் கல வொழுங்கமைப்புடையவை. இவை தனிக் கலத்தாலான அல்லது பல்கலத்தாலான பங்கசுக் களைக் கொண்ட இராச்சியமாகும். சுமார் 1.5 - 5 மில்லியன் வரையான பங்கசு இனங்கள் இவ் இராச்சியத்தில் அடங்குகின்றன. மிகச்சிறிய கட்டமைப்பைக் கொண்டவை இவ்வங்கிகள் சூழலில் உள்ள சேதனப் பதார்த்தங்களைப் பிரிகையடையச் செய்வதில் பாரிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதே போன்று பிற அங்கிகளுடன் ஒன்றிய வாழ்வுக்குரிய ஈட்டத்தை காட்டுகின்றன.
பங்கசுக்கள் மனிதனுக்கு பயனுள்ளதாக அமையும் சில சந்தர்ப்பங்கள் உரு காட்டப்பட்டுள்ளன.
- புரத குறைநிரப்புணவாகப் பயன்படுத்தப்படல். (உதாரணம் Agaries வகைக் காளான்கள்)
- பாண் உற்பத்தியின் போது மாவைப் பொங்கச் செய்தல் மற்றும் அற்ககோல் நொதித்தல் செயன்முறைகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படல். (உதாரணம் மதுவம் Yeast)
- நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படல். (உதாரணம் Penicillium இனப் பங்கசில் இருந்து பெனிசிலின் உற்பத்தி செய்தல்.)
- இறந்த சேதன உடல்களைப் பிரிகையடையச் செய்தல்.
- பங்கசுக்கள் மனிதருக்குத் தீங்குபயக்கும் சந்தர்ப்பங்கள்
- நோய்களை ஏற்படுத்துதல். (உதாரணம் - Candida மூலம் மனித தேமல் நோய் ஏற்படல்)
- உணவைப் பழுதடையச் செய்தல் (Food Spoiluge)
- தாவரங்களிலும் விலங்குகளிலும் நோய்களை ஏற்படுத்துதல். (உதாரணம் Playtopthora வினால் உருளைக் கிழங்கில் பின்வெளிறல் நோய் ஏற்படல், விலங்குகளில் Pilyriacis Versicolor (aluham) நோய் ஏற்படல்.)
பாண் துண்டில் Mucor என்ற பங்கசுவை அவதானிப்போம்.
பற்றீரியா
கட்டமைப்பு
நுணுக்குக் காட்டிக் குரியவை தனிக்கலத்தா லான அங்கிகளாகும். அமைப்பாங் கற்ற கருவைக் கொண்டது. புரோகரி யோற்றாக்கள். (Prokaryotic)
வடிவம்
பற்றீரியாக்கள் கோளவுருவான (Coccus) கோலுருவான (Bacillus) சுருளியுருவான (Spirilum) காற்புள்ளியுருவான (Vibrio) வடிவங்களில் காணப்படுகின்றன. சயனோபற்றீரியா தனிக் கலமாகவோ அல்லது இழையுருவானதாகவோ காணப்படும்.
போசணை
பெரும்பாலானவை பிறபோசணிகளாகும். எனினும் சயனோ பற்றீரியாக்கள் தற்போச ணிகளாகும்.
இனப் பெருக்கம்
பெரும்பாலும் இலிங்கமில்முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பற்றீரியாக்கள் இருகூற்றுப் பிளவு மூலமாகவும் சயனோ பற்றீரியாக்கள் துண்டாதல், அரும்புதல் போன்ற முறைகள் இலிங்கமில்முறை மூலமாகவும் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும்.
பரம்பல்
காற்று, மண், நீர் அங்கிகளின் உடல் என எல்லா வகைச் சூழல்களிலும் பரவலாகப் பரம்பிக் காணப்படுகின்றன.
உதாரணம்
பற்றீரியா, சயனோபற்றீரியா
புரோட்டீஸ்ரா
கட்டமைப்பு
பெரும்பாலானவை நுணுக்குக்காட்டிக் குரியவை. எனினும் சிவப்பு அல்காக்கள் பெரிய உடலமைப்பை கொண்டது.
பெரும் பாலானவை தனிக் கலத்தாலானவை.
ஒரு சில வகைகள் பல்கலத்தாலானவை எனினும் இழைய வியத்தம் காணப்படாது.
(Eukaryotic) இயூக்கரி யோற்றாக்கள் அமைப்பாங்குடைய கருவைக் கொண்டது.
வடிவம்
இழையுருவான தாகவோ ஒழுங்கற்ற வடிவினதாகவோ குதிரை இலாட வடிவினதாகவோ காணப்படும்.
போசணை
அல்காக்கள் தற்போச ணிகளாகும். தனிக்கல விலங்குகள் பிறபோசணிகளாகும்.
இனப் பெருக்கம்
இரு கூற்றுப் பிளவு, துண்டாதல் மற்றும் வித்திகளை உருவாக்குதல், மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும்.
பரம்பல்
உவர் நீர்,நன்னீர், ஈரப்பற்றுடைய மண், அங்கிகளின் உடல் போன்ற வற்றில் வாழும்.
உதாரணம்
அல்கா புரோட்டோசோவா (Amoeba, Paramecium)
பங்கை
கட்டமைப்பு
பெரும்பாலான அங்கிகள் நுணுக்குக் காட்டிக்குரியவை. எனினும் ஒருசில இனங்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புகள் வெறும் கண்ணுக்குத் தோற்றக் கூடியன.
(உதாரணம் : காளான்கள்) சில வகைப் பங்கசுக்கள் தனிக்கலத்தாலானவை.
பல்கலத்தாலான பங்கசுக்கள் பூசண வலைகளாகக் (Mycilium) காணப்படும். இழைய வியத்தம் காணப்படுவதில்லை. இயூக்கரியோற்றாக்கள் (Eukaryotic)
வடிவம்
தனியான வட்ட வடிவானதாகவோ அல்லது பூசண வலையாகவோ காணப்படும்.
போசணை
இவ்விராச்சியத் தைச் சேர்ந்த ள் சகல அங்கிகளும் பிறபோசணிக ளாகும். இவற்றுள் பெரும்பாலான வை அழுகல் வளரிகளாகும்.
இனப் பெருக்கம்
பெரும்பாலும் வித்திகளை உருவாக்குவதன் மூலம் இலிங்கமில் முறை இனப் பெருக்கத்தை மேற்கொள்ளும்
பரம்பல்
சேதனப் பதார்த்தங்களின் மீதும் அங்கிகளின் உடலினுள்ளும் வாழும். நீர்ச்சூழல் களில் மிகக் குறை வாகவே காணப்படும்.
உதாரணம்
பங்கசுக்கள்
இராச்சியம் - பிளான்ரே (Kingdom Plantae)
1. பூக்காத் தாவரங்கள்
2. பூக்கும் தாவரங்கள்
பூக்காத் தாவரங்கள் (Non-flowering plants)
1.வித்துக்களைத் தோற்றுவிக்காத பூக்காத் தாவரங்கள்
2.வித்துக்களைத் தோற்றுவிக்கும் பூக்காத் தாவரங்கள்
பூக்கும் தாவரங்கள் (Flowering plants)
1.ஒருவித்திலைத் தாவரங்கள்
2.இருவித்திலைத் தாவரங்கள்




0 تعليقات