இராச்சியம் - பிளான்ரே (Kingdom Plantae)
பச்சைத் தாவரங்கள் எனப் பொதுவாக அழைக்கப்படும் பல்கல அங்கிகளைக் கொண்ட இராச்சியம் இதுவாகும். இவை சுமார் 287,000 வகையான இனங்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. தாவரக் கலங்கள் செலுலோசினாலான கலச்சுவரைக் கொண்டவை. இவ்விராச்சியத்திற்குரிய அங்கிகள் பொதுவாகப் பச்சை நிறமாகக் காணப்படும். இதற்குக் காரணம் கலங்களிலுள்ள பச்சையுருமணிகளில் காணப்படும் பச்சையம் (குளொரபில்) எனப்படும் நிறப்பொருளாகும். பச்சையத்தினாற் சூரிய சக்தி அகத்துறிஞ்சப்பட்டு ஒளித்தொகுப்பு எனப்படும் செயன்முறை மூலம் உணவு உற்பத்தி செய்யப்படும். இலிங்க முறை இனப்பெருக்கம் மூலமாகவும் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் மூலமாகவும் தமது சந்ததிகளைப் பெருக்கும்.
பிளான்ரே இராச்சியத்தைச் சேர்ந்த அங்கிகள் பூக்களைத் தோற்றுவிப்பன மற்றும் பூக்க ளைத் தோற்றுவிக்காதன எனுமியல்பை அடிப்படையாகக் கொண்டு பிரதானமாக இரண்டு கூட்டங்களாக வகைப்படுத்தப்படும். அவையாவன,
1. பூக்காத் தாவரங்கள்
2.பூக்கும் தாவரங்கள்
பூக்காத் தாவரங்கள் (Flowering plants)
பூக்களைத் தோற்றுவிக்காத தாவரங்கள் பூக்காத் தாவரங்கள் என அழைக்கப்படும். பூக்காத் தாவரங்களை வித்துக்களைத் தோற்றுவிப்பவை, மற்றும் வித்துக்களைத் தோற்றுவிக்காதவை எனும் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் இரண்டு கூட்டங்களாக வகைப்படுத்தப்படும்.
(1) வித்துக்களைத் தோற்றுவிக்காத பூக்காத் தாவரங்கள்
(2) வித்துக்களைத் தோற்றுவிக்கும் பூக்காத் தாவரங்கள்
வித்துக்களைத் தோற்றுவிக்காத பூக்காத் தாவரங்கள்
பூக்களைத் தோற்றுவிக்காததும், வித்துக்களைத் தோற்றுவிக்காததுமான தாவரங்கள் இதிலடங்கும்.
உதாரணம் : Marchantia, Pogonatum, Selaginella, Nephrolepis, Salvinia, Acrosticum, Drynaria
வித்துக்களைத் தோற்றுவிக்காத பூக்காத் தாவரங்களின் இயல்புகள் பின்வருமாறு.
கட்டமைப்பு
மிகச் சிறிய பருமனைக் கொண்ட தாவரங்களிலிருந்து பெரிய (பாரிய) பருமனைக் கொண்ட தாவரங்கள் வரை காணப்படுகின்றன.
சில வகைத் தாவரங்களில் உண்மையான இழையவியத்தம் நிகழவில்லை. இதனால் இவற்றில் வேர், தண்டு, இலைகள் காணப்படுவதில்லை. இவ்வகைத் தாவரங்கள் பிரிவிலிகள் (Thallus) என அழைக்கப்படும். சில வகைத் தாவரங்களில் இழையவியத்தம் நடைபெற்றுள்ளது. இவற்றிற் கடத்தும் இழையங்களான கலனிழையங்கள் காணப்படும். இவற்றில் வேர், தண்டு, இலைகள் காணப்படும்.
வடிவம்
பிரிவிலி உடலமைப்பையோ அல்லது சிறிய பன்னங்களாகவோ வடிவம் காணப்படும்.
போசணை
இக் கூட்டத்திற்குரிய சகல அங்கிகளும் தற்போசணிகளாகும். ஒளித்தொகுப்பிற்குரியவை. சில வகைத் தாவரங்கள் மேலொட்டிக ளாகும். வித்திகளைத் தோற்றுவித்தல், துண்டாதல் போன்ற முறைகளால்
இனப் பெருக்கம்
இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும். இலிங்க முறை இனப்பெருக்கத்தையும் மேற்கொள்ளும்.
பரம்பல்
பொதுவாக நிழலானதும் ஈரலிப்பானதுமான குறைந்த சூரிய ஒளியைக் கொண்ட தரைச் சூழலில் பரம்பிக் காணப்படும்.
வித்துக்களைத் தோற்றுவிக்கும் பூக்காத் தாவரங்கள்
வித்துக்களைத் தோற்றுவிக்கும் பூக்காத் தாவரங்களின் வித்துக்கள் பழக்கத்தினால் சூழப்பட்டுக் காணப்படுவதில்லை. வித்துக்கள் சூழலுக்குத் திறந்த நிலையிற் காணப்படும் இதனால் இவை வித்து மூடியிலித் தாவரங்கள் (Gymnosperms) என அழைக்கப்படும்.
உதாரணம்
மடுப்பனை (Cycas)
பைனஸ் (Pinus)
வித்துக்களைத் தோற்றுவிக்கும் பூக்காத் தாவரங்களின் இயல்புகள்
கட்டமைப்பு
இவ்வகைத் தாவரங்களில் உண்மையான இழையவியத்தம் நடைபெற்றுள்ளது. கலனிழையங்கள் காணப்படும். வேர், தண்டு,இலை என்பவற்றைக் கொண்டிருக்கும்.
வடிவம்
பருமனிற் பெரிய தாவரங்களாகும். பெரும்பாலானவை மரங்களாகும். வைரஞ்செறிந்த மரங்களைக் கொண்டவை. சில வகை புதர்களாகக் காணப்படும்.
போசணை
தற்போசணிகளாகும். ஒளித் தொகுப்பிற்குரியவை.
இனப் பெருக்கம்
வித்துக்கள் மூலம் இலிங்கமுறை இனப்பெருக்கமும் வித்துகள் மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கமும் மேற்கொள்ளும்.
பரம்பல்
இத் தாவரங்கள் தரைச் சூழலில் பரம்பிக் காணப்படும்.
பூக்குந் தாவரங்கள்
பூக்களைத் தோற்றுவிக்கும் தாவரங்கள் பூக்குந் தாவரங்கள் என அழைக்கப்படும். பூக்கும் தாவரங்களின் இலிங்கமுறை இனப்பெருக்கக் கட்டமைப்பு பூவாகும். பூக்களிலிருந்து பழங்கள் தோன்றுவதுடன் பழத்தினுள் வித்துக்கள் தோன்றும். வித்துக்கள் எப்போதும் பழத்தினால் மூடப்பட்டுக் காணப்படுவதால் இவை வித்துமூடியுளிகள் (Angiosperms) என அழைக்கப்படும். இத்தாவரங்கள் தரைச்சூழலுக்கு நன்கு இசைவாக்கமடைந்துள்ளதோடு நீர்க் காப்பிற்கான இசைவாக்கங்களையும் கொண்டுள்ளன.
பூக்கும் தாவரங்களின் வித்தினுள் காணப்படும் வித்திலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவற்றை இரண்டு கூட்டங்களாக வகுக்கலாம். அவையாவன.
1. ஒருவித்திலைத் தாவரங்கள்
2. இருவித்திலைத் தாவரங்கள்
ஒருவித்திலைத் தாவரங்களினதும் இருவித்திலைத் தாவரங்களினதும் இயல்புகளுக் கிடையேயான ஒப்பீடு அட்டவணை
ஒரு வித்திலைத் தாவரங்கள்
- வித்தில் தனியொரு வித்திலை மாத்திரம் காணப்படும்.
- பிரதான தண்டு கிளைகளைக் கொண்டிருப்பதில்லை.
- ஆணிவேர் காணப்படுவதில்லை. நார்வேர்த் தொகுதி காணப்படும்.
- இலைகள் சமாந்தர நரம்பமைப்பைக் கொண்டவை.
- பூவின் பாகங்கள் முப்பாத்தானவை.
- துணை வளர்ச்சி நடைபெறாதவை.
- தண்டின் எல்லாப் பகுதிகளும் ஒரே தடிப்பைக் கொண்டிருக்கும்.
உதாரணம்: தென்னை, புல், வாழை, நெல்
இருவித்திலைத் தாவரங்கள்
- வித்தில் இரண்டு வித்திலைகள் காணப்படும்.
- பிரதான தண்டு கிளைகளைக் கொண்டிருக்கும்.
- ஆணிவேரையும் பக்கவேர்களையும் கொண்ட வேர்த் தொகுதி காணப்படும்.
- இலைகள் வலையுருவான நரம்பமைப்பைக் கொண்டவை.
- பூவின் பாகங்கள், நாற்பாத்திற் குரியவை அல்லது ஐம்பாத்திற் குரியவை.
- துணை வளர்ச்சி நடைபெறுபவை. தண்டின் அடிப்பகுதி
- அகன்றதாகவும் உச்சியை நோக்கி படிப்படியாக ஒடுங்கியதாகவும் காணப்படும்.
உதாரணம் : மிளகாய், மாமரம்,பலாமரம், நீலோற்பலம்




0 تعليقات