கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை மீண்டும் எழுந்து வா தோழா
பாரதம் போற்றும் மைந்தனே!
அடிமட்டத்தில் விழுந்துவிட்டாயோ?
நீ தலை குணிந்தாயோ?
முற்றும் ஒழிந்துவிட்டதோ?
உன் புகழ் நீங்கியதோ?
இவையல்ல உன் வாழ்க்கை வீரம்.
உன்வாழ்க்கை பொருளிலோ
புகழிலோ அடங்கியதல்ல
வீரத்திலும் தன்னம்பிக்கையிலும் தான்
உனதுவாழ்க்கை சூழ்ந்துள்ளது
மைந்தனே! உத்தமர்களாலும்
துரோகிகளாலும்உருவானதே இவ்வயகம்!
ஒரு முறை அலைச் சீற்றமே
நமது எச்சரிக்கை மீண்டும் வாழ்வை
மாற்றிடத்தில் தொடங்குகிறோம் அல்லவா?
எம் மைந்தனே விழுவதும்
வீழ்த்தப்படுவதுமோ
இவ்வயகத்தின் மாபெரும் சூழ்ச்சி
அதில் மீண்டும் துள்ளி எழுவதும்
அழுவதும் நமது திறன்!
எனவே மீண்டும் எழுந்து வா தோழா!
நன்றி - சி. ஜ. தனுஷிகா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.
.jpg)










1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete