தமிழ் கவிதை அம்மா பாசம் (Tamil Kavithai Amma)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை அம்மா பாசம்

தமிழ் கவிதை அம்மா

உயிருக்குள்ள உடல வச்சி

உடலுக்கு உயிர் கொடுத்து

உலகம் சுத்த விட்டவளே

கண்மூடி நான் கிடந்தாலும்


கண் முழிச்சு காத்தவளே

கடலை கொல்லையில 

கடுமையா வேலை செய்ய

வேப்ப மர கிளையில


வேட்டியில தொட்டில் கட்டி

வேகமா தூங்க வச்சு

வேலையில நீ இறங்க

தொட்டிலில தூங்கிய நான்


தொணத்தொணன்னு அழுது சினுங்க

தொடர்ந்து வந்து ஆட்டிவிட்டு

தொட்டிலிலே தூங்க வச்ச

தவழ்ந்து நானும் திரியயில


தடுமாறி நடக்கையில

தவமிருந்து காத்தவளே

தண்ணீர் குடம் எடுத்து

தலையில் நீ சுமக்கையில


இடைஞ்சல் என நினைக்காம

இடையில் என்ன சுமந்தவளே

காளை மாடு கலப்பையோட

கழனியில அப்பன் உழ


கையில கஞ்சி கலயத்தோட

களை எடுக்க போனவளே

பள்ளிக்கூடம் போய் வந்து

பாடம் நானும் படிக்கையில


பார்த்துப் பார்த்து ரசிச்சவளே

பாசம் கொட்டி வளர்த்தவளே

அஞ்சாவது படிக்கையில

ஆடு முட்டி நான் விழுக


அய்யோ ஆத்தினு நீ அழுக

ஆஸ்பத்திரியில் சேர்த்து வச்சு

அல்லும் பகலும் பார்த்தவளே

கல்லூரியில் நான் படிக்க


காலமெல்லாம் ஓடி ஓடி

கால் கடுக்க உழைச்சவளே

கல்லூரி முடித்த பின்னும்

வேலை வெட்டி இல்லாம


வெட்டிப் பயலா நான் இருக்க

வெயில் மழை பார்க்காம

வேலை செஞ்சு காத்தவளே

கல்லூரி நான் படிக்கையில


காதலிச்ச பொண்ணு இவன்னு

கை நீட்டி நான் காட்ட

கல்யாணம் செஞ்சு வச்சு

கண்ணுக்கு அழகா பார்த்தவளே


அரசாங்க வேலைக்கு போயி

அழகாக நான் சம்பாதித்தாலும்

அது இது வேணும்ன்னு

அழுச்சாட்டியம்  செஞ்சதில்ல


அன்றாடம் போலவே

அயராது நீ உழைச்சு

என்னோட சேர்த்து

என் குழந்தைகளையும் காப்பவளே


ஏழு சென்மம் உண்மைன்னா

எடுக்கும் சென்மம் அத்தனையும் 

என்னோட அன்பு மகளா

எனக்கே பிறக்க வேணும்

என் ஆருயிர் ஆத்தாவே

நன்றி - கவிஞர் இரா.சுப்ரமணியன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments